Saturday, July 7, 2012

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா??? ”ராம்” எனது பார்வையில்....


அமீரே தயாரித்து இயக்கியிருக்கும் ஒரு திரைப்படம் தான் “ராம். யதார்த்தமாக ஒவ்வொரு நாட்டிலும் என்ன நடக்கின்றது என்பதனை அழகாக சொல்லியிருக்கின்றது ஜீவா நடித்த ராம். இத்திரைப்படம் 2005ல் வெளியாகியிருந்தாலும் அதனை ரசிக்கும் வாய்ப்பு எனக்கு இன்றே கிடைத்தது. பார்த்தவுடனேயே ஒரு பதிவினை எழுத வேண்டும் என என்னைத்தூண்டியது. அந்தளவிற்கு கதையினை கச்சிதமாக நகர்த்திச் செல்கின்றார் இயக்குனர் அமீன்.


 தவிர இசையமைப்பில் யுவன் அசத்தியிருக்கின்றார். ஆராரிராரோ, நிழலினை நிஜமும் பிரிந்திடுமா பாடல்களை மனம் தொடர்ந்தும் கேட்கத்தூண்டுகின்றது.
பாடலினை ரசிக்க இந்த இணைப்பினை அழுத்துங்கள்.....
இப் பாடலை நண்பன் உஷி கேட்டதற்காக தேடி எடுத்திருக்கின்றேன்.எந்த திரைப்படம் என்று தெரியாமல் ரசித்த பாடல்களில் இதுவும் இன்று.

ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண் உறங்கு,என்னோட மடி சாய்ந்து

நிழலினை நிஜமும் பிரிந்திடுமாஉடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

இயக்குனர் மகனே தாயைக் கொல்வதாக காட்டியிருப்பது எந்தளவிற்கு பொருத்தமானது என்பது கேள்விக்குரியதே. தவிர தாய்ப்பாசத்தின் இலக்கணத்தினை எமக்கு சொல்லியிருக்கின்றது.கணவன் ராம் கருவுற்ற காலத்திலேயே கைவிட்டிருந்தாலும் அவனை கவனமாக வளர்ப்பது மனதை வருடுகின்றது. ஆனால் இப்போதய காலத்தில் வயது முதிர்ந்த பெற்றோரை முதியோர் இல்லத்திலே சேர்க்கும் ஈனப்பிறப்புகளிற்கு இது நல்லதொரு அடி.
சரி இனி திரைப்படத்தின் கதை மீது கண்ணோட்டத்தினை செலுத்துவோம்.
மகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகின்றனர்  
காவல்துறையினர். 
தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.  
இதற்கிடையே கொலைகாரனாக கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் 
ராமின் காதலி.

                                            

ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம்
மேலும் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிக்கின்றார். இதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும்
 செய்யப்படுகின்றார்
அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கின்றான். தாயாரின் வயிற்றில் 
குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் 
மயங்கி சரிகின்றார்.

                                                       
இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம்
இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவற்றிற்காக சிறை சென்றதற்காகவும்,
 தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை 
செய்யத்தூண்டப்படுகின்றான்.
                                         
இவ்வாறு நகர்கின்றது திரைப்படம்.
ராமின் தாயினை தன் சகோதரன் தான் கொன்றான் என்பதனை தெரிந்து கொண்ட ராமின் காதலி சகோதர பாசத்தினை தாண்டித் தட்டிக்கேட்கின்றார். தவிர தந்தை, தனயன் என்று கூடப்பார்க்காமல் சத்தியத்தினை நிலை நாட்ட முயல்கின்றார். இவை இப்போதயவர்களிடம் காண முடியுமா என்பது வியப்பிற்குரியதே.
யுவனின் இசையில் பாடல்கள் பிரமாதம்.இடையிடையே வரும் இசையும் படத்தின் பால் ஒன்றிக்க வைக்கின்றது. அத்தோடு கஸாலா, ரஹ்மான், முரளி, சரண்யா, சக்தி, பிரதாப் பொத்தன் ஆகியோரும் கதையோடு ஒட்டிப்போகின்றனர்.

                                         
 
அறிமுகப்படத்திலேயே கஞ்சா கருப்பு அச்த்தியிருக்கின்றார். ஆனால் மனைவியைக் கண்டு அஞ்சுவதும், வேறு ஒருவனுக்கு அடிப்பது என நினைத்து கட்டிய மனைவியை அடிப்பதும், அடித்த பின்பு தடுமாறுவதிலும்  பரிதாபம் தென்படுகின்றது.
                                     
தவிர இரண்டு விருதுகளும் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருப்பது சிரப்பம்சமாகும்.2006ம் ஆண்டு CIFFன்  சிறந்த நடிகரிற்கான விருது ஜீவாவிற்கு சேர்ந்திருக்கின்றது. குறித்த ஆண்டின் CIFFன்  சிறந்த இசையமைப்பிற்கான விருது ”ராம்”ற்கு இசையமைத்தமைகாக யுவனிற்கு கிடைத்திருக்கின்றது.  




சரியாக முடிவெடுத்தலையும், வீண்பழி சுமத்துவதனையும் பற்றி  சட்டப்படி சொல்லியிருக்கும் ராம் மொத்தத்தில் நல்ல பல விடயங்களை பலரிற்கு தந்திருக்கின்றது.

1 comment:

பிரபல்யமான பதிவுகள்