Sunday, September 23, 2012

இலங்கை தடம் மாறியதா? தடுமாறியதா?


இன்றைய தினம் T-20 உலக கிண்ணத்தினைப் பொறுத்தவரை முற்று முழுதாக எதிர்பார்க்கப் பட்ட போட்டிகள் ஆரம்பமாயிருக்கின்றன. அதிர்ஷ்டமில்லாத, பலவீனமான அணிகள் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதால் தத்தமது குழுக்களில் முதலிடத்தைப் பெற்று அடுத்தகட்ட போட்டிகளை இலகுவாக்கவே இவை வழி சமைக்கும் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க யாழ் குடாநாட்டினைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் மின்தடை. ஒரு சில முக்கிய நிகழ்வுகள் காரணமாக போட்டியினை நேரடியாக பார்க்கவும் முடியவில்லை, என்ன செய்வது, எனக்குப் பிடித்த இலங்கை அணி களமாடுவதால் போட்டியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. மினுற்பத்தியாக்கியை (JENARATOR) ஒரு மாதிரி தேடிப் பிடித்து, அப்பப்பா அலுத்தே விட்டது….
                          
சரி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று போட்டியின் அலைவரிசையினை நகர்த்தினால் மழை காரணமாக போட்டி இன்னும் ஆரம்பமாகவில்லை என் உணர முடிந்தது. சரி, எல்லா ஏற்ஆடுகளையும் முடித்தாயிற்று, இன்னும் போட்டி ஆரம்பமாகவில்லையே என்னும் பேராதங்கம்…..
5.15போல கைத்தொ(ல்)லைபேசியில் பார்த்த போது போட்டியானது 7 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்டதாக 6மணிக்கு ஆரம்பமாகுமாம் என்றது. சரி, ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலியே என்ற மாதிரி போட்டியை காணும் ஆவல் வலுப்பெற்றது.
நாணயற்சுழற்சி, இலங்கை வென்று முதலில் களத்தடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டும்.
போட்டி ஆரம்பம் தாமதம், பந்துப் பரிமாற்றங்கள் குறைவு அப்போ முதலில் துடுப்பெடுத்தாடினாலே சாதகமாக அமையும் என்பது யதார்தம். இதை தாண்டி களத்தடுப்பாட்டத்தை தேர்வு செய்தமை கடவுளுக்கும் ஜெயவர்தனவுக்கும் தான் வெளிச்சம்.
                             
ஆரம்ப ஓவர்களில் தென்னாபிரிக்காவினை கட்டுப் படுத்தி தான் வைத்திருந்தார்கள். மலிங்கவின் முதலாவது ஓவர் போட்டு வாங்கப்பட்டது, அதற்கப்புறமாக ஏன் தனது இரண்டாவது ஓவரையும் வீச மலிங்க அழைக்கப்பட்டார்?
தவிர கடந்த போட்டியில் சாதனையுடன் சுழலில் அசத்திய அஜந்த மெண்டிஸ் ஏன் நீக்கப் பட்டார்.
போட்டியில் சிலரது பந்துகள் அடித்து நொறுக்கப் பட்ட போது  பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் ஏன் உபயோகிக்கப் படவில்லை?

                      
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குழுவிலே முதலிடத்தை பெற முடியும் , ஆதலால் தொடரும் போட்டிகளை இலகுவாக கடக்க முடியும் என்பது ஜெயவர்தன அறியாததா?
தென்னாபிரிக்காவால் ஒற்றை ஒட்டங்களை (SINGLE) விட இரட்டை ஓட்டங்களும், நான்குகளும், ஆறுகளுமே மாறி மாறி குவிக்கப்பட்டது.
டீ வில்லியர்ஸ் அதிரடியாக 15 பந்துகளில் 30 ஓட்டங்களப் பெற்றமை 7 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியின் போக்கினை முற்று முழுதாக தென்னாபிரிக்கப் பக்கம் மாற்றியிருந்தது.
                          
எனவே பந்து வீசாளர்களின் பலம் மிகக் கேள்விக்கு உரியதாகியிருக்கின்றது?
78 என்னும் ஓட்ட இலக்கு T-20ஐ பொறுத்தவரை பெரியதொரு இலக்கு அல்ல. டில்ஷான், ஜெயவர்தன, பெரேரா, சங்கா ,மத்யூஸ் கொண்ட பெரும் துடுப்பாட்ட படைக்கு இலகுவானதொரு இலக்காக இலங்கை துடுப்பெடுத்தாடும் வரை 78 ஓட்டங்கள் இருந்தன.
ஆனால் ஆரம்பமே அதிர்ச்சி. டில்ஷான் எந்தப் பந்துகளையும் எதிர்கொள்ளாமலே ஜெயவர்தனவால் வெளியேற்றப்பட்டார்.

                      
டில்ஷானை அனுப்பிய பின்பு அந்தப் பொறுப்பையும் உணர்ந்து ஜெயவர்தன துடுப்பெடுத்தாடாதது ஏமாற்றமே.
3ம் இலக்கத்தில் பெரேரா எதிர்பார்க்கப் பட்ட போதும் படபடப்பான நேரத்தில் T-20க்கு புதியவரான முனவீர களமிறக்கப் பட்டதன் விளைவு தான் என்னவோ? அவர் போட்டியில் எடுத்த பயிற்சிகளை வீட்டிலிருந்தே எடுத்திருக்கலாம்.
சங்கா கூட அந்தளவிற்கு பொறுப்புணர்ந்து துடுப்பெடுத்தடவில்லை.

தனியே ஸிம்பாவெயை மட்டும் ஜெயித்தால் போதாது, இன்னும் பலமாக வளர வேண்டியது காலத்தின் தேவை. பந்து வீச்சு,துடுப்பாட்டம், களத்தடுப்பு இன்னும் வளர வேண்டும், இல்லா விட்டால் இன்னொரு 1996ஐ இலங்கையில் காண இன்னும் 20 வருடங்கள் எடுக்கலாம்.

அடுத்த போட்டி, அவுஸ்ரேலியாவுக்கு அசத்திக் காட்டினார் கிறிஸ்கெயில்ஸ்,
நேற்றைய பிறந்த நாள் விருந்தை இன்று அவர் ரசிகர்களுக்கு படைத்திருக்கின்றார் என எதிர்பார்க்கலாம்.

                      
என்னதான் இருந்தாலும் டக்வேர்த் லூயிஸ் முறையில் 17 ஓட்டங்களால் கங்காருக்கள் வென்றிருக்கின்றன.
மழை போட்டிகள வெகுவாக பாதிக்கின்றது. இலங்கை அணியின் தோல்வியைக் கண்டு வருணபகவான் அழுதுவிட்டார் போலும்……..
இன்னும் கலகலப்பான போட்டிகள் இனித்தான், காத்திருப்போம்…
                          

Friday, September 21, 2012

நடந்தவைகள், இனி நடக்கப்போகின்றவைகள்:. T-20 உலகக் கிண்ணம்-


உலகக் கிண்ணம் ஆரம்பித்து மிகக் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. பல அணிகள் தங்களை இனம் காட்டியிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் ஓரளவாயினும் நிறைவேறியிருக்கின்றன. எதிர்பார்க்கப்படுகின்ற போட்டிகள் தொடர்ந்து வரும் நாட்களில் நடைபெறவிருப்பதால் விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை.
ரசிகர்கள் மோதியடித்து ஆர்வமாக போட்டிகளை ரசிக்கின்றனர். ஆகவே வருவாய் மிகப் போதுமானதாக அமையும். வீரர்களுக்கான அதரவும் மிக வலிமையானதாக இருக்கின்றது. இவை இலங்கையிலும் கிறிக்கட் உயிரோட்டமாக இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

நிறைவடைந்த போட்டிகளிலே எதிர்பார்த்த படி இலங்கை சிம்பாவேயை வீழ்த்தியிருக்கின்றது. இதனை எல்லோரும் எதிர்பார்த்திருந்தாலும் மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் தன்னை நிரூபித்திருக்கின்றார். பல மாதங்களாக அணியிலிருந்து தூக்கப் பட்ட்தால் ஓய்விலும், உடற்தகுதியை நிரூபிக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்த மெண்டிஸுன் அயராத உழைப்பிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.                                                                                                  

அன்றைய இலங்கை சிம்பாவே போட்டி முற்று முழுதாக மெண்டிஸ்களின் போட்டியாகவே மாறியிருந்தது. துடுப்பாட்டத்தில் ஜீவன்மெண்டிஸ் அசத்த பந்துவீச்சில் அஜந்தமெண்டிஸ் தன் கைவரிசையினைக் காட்டியிருக்கின்றார்.
                                            
தவிர சங்காவும் வழங்கப்பட்ட 3விருதுகளுக்கும் தான் தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கின்றார். மலிங்க இன்னும் ஃபோர்முக்கு வந்ததாக தெரியவில்லை. அன்றைய நாளிலே மலிங்கவின் அனைத்து பந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இலங்கையின் பந்து வீச்சு இன்னும் பலமானதாக மாற்றியமைக்கப் பட வேண்டியிருக்கின்றது. அப்படியாக மாற்றப்படும் போதே இன்னோரு 1996 பற்றி நாம் கனவு காண முடியும்.

 இந்தியா உண்மையிலே அன்று கலங்கியிருப்பர். பங்களாதேஷ் அல்லது ஸிம்பாவே போன்ற சின்ன அணிகள் தான் அசத்தும் என எதிர்பார்த்த அனைவரிற்கும் பேரதிர்ச்சி. ஆப்கானிஸ்தான் உரிமைகளுக்காக போராடுவது போன்றே கிறிக்கட்டிலும் தங்கள் நிலைகளை ஸ்திரப்படுத்தப் போராடுகின்றமை தெளிவாகத் தெரிகின்றது.

                   

  பந்து வீச்சு துடுப்பாட்டம் இரண்டிலும் ஒரளவு திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும் இன்னும் அவர்கள் வளர வேண்டியிருக்கின்றது. களத்தடுப்பு மிக மோசம். பல இலகுவான பிடிகள் மைதானத்தில் நழுவ விட்டிருந்தனர். இவை கூட போட்டியினை இழக்கப் பண்ணியிருக்கலாம். திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமாக இருக்கின்றனர். வாழ்த்துக்கள், எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் நிறைவேற்றியமைக்காக. வளருங்கள், வானமே உங்கள் எல்லை.

                  ஸிம்பாவே மிக எதிர்பார்க்கப் பட்ட அணி. முதலாவதாக தொடரிலிருந்து சோகத்தோடு விடைபெறுகின்றது. திறமைகள் இருந்தால் மட்டும் போதாது. அதிர்ஸ்டமும் தேவை என்பதற்கு சான்றாகியிருக்கின்றனர். அவர்களின் கூட்டுமுயற்சி,அணி ஒற்றுமைகள் கூட அண்மை காலங்களிலே கேள்விக்குரியதாய் மாறியிருக்கின்றது. அசத்த வேண்டுமெனில் ஒற்றுமையும் தேவை. தொடர்ந்து திறமைகளை எதிர்பார்க்கின்றோம்.
              


   தென்னாபிரிக்கா, சொல்ல வேண்டியதேயில்லை. அதிரடி வீரர்கள், அசத்தும் பந்துவீச்சாளர்களை வைத்து கிண்ணத்தை வெல்லுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இந்தியா, ரசிகர்கள் தான் அவர்களின் பலமும்,பலவீனமும். அன்றைய போட்டியின் போது கூட கங்குலியின் படங்கள் எரிக்கப் பட்ட நிலை டோனிக்கும் வருமோ என்று எண்ணும் அளவுக்கு ஆப்கானிஸ்தானின் திறமை பாராட்டபட வேண்டும். தவிர ஹோஹ்லி  வாயால் அடிப்பதை விடுத்து இன்னும் சிறப்பாக துடுப்பால் அசத்தலாமே? சதங்கள், அரைச்சதங்கள், ஆறு ஓட்டங்களைப் பெறுகின்ற போது ஹோலியின் வாயால் வருகின்ற வார்த்தைகள், இவரும் காந்திபிறந்த மண்ணின் மைந்தனா என வினாவெழுப்ப வைக்கின்றது.

               



அவுஸ்ரேலியா தரவரிசையில் கடைசியாக இருந்தாலும் அயர்லாந்தின் மீது தங்கள் திறமைகளைத் திணித்திருக்கின்றனர்.

கிறிக்கட்டின் முடிவுகளினை ஊகிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது.
இந்த 2012ம் ஆண்டின் உலக கிண்ணப் போட்டிகளை நழுவ விட்டோமாக இருந்தால் அடுத்த உலக கிண்ண போட்டியொன்றினை இன்னும் 20வருடங்களின் பிற்பாடே இலங்கையில் காணமுடியுமாம் பாருங்கோJ

நான் வெளிக்கட்டன், மூட்டை முடிச்சுகளோடு, உலக்கிண்ண போட்டிகளுக்காக, நீங்கள் என்ன மாதிரி?

ஆர்வத்தோடு, நிதானமாக காத்திருக்கின்றோம், கிண்ணம் வெல்லும் கனவோடு......

          

         

Tuesday, September 18, 2012

கோலாகலமான 2012ன் T-20 கிறிக்கட் போட்டி!


இருக்கிற நேரத்தையெல்லாம் மிச்சப் படுத்தி T-20 கிறிக்கட் போட்டி சம்பந்தமான  ஒரு பதிவை இடுகின்றேன்.  அடுத்தடுத்த பதிவுகளில் முழுமையான தகவல்களையும் இடுகையிடக் காத்திருக்கின்றேன்.


                                 

19 நாட்கள் ஓயாதகொண்டாட்டம்,
விளம்பரதாரர்கள், ஒளிபரப்பும் உரிமை என பல விடயங்கள்,
எல்லா போட்டிகளுக்குமான டிக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன,(அரையிறுதி,இறுதி உட்பட), யார் அசத்துவார்கள் என்னும் எதிர்பார்ப்பு..
அதிரடிகளுக்கு பஞ்சமில்லாது ரசிகர்களின் வேட்கைக்கு தீனி போடப்போகும் T-20 கிறிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. பலர் தங்கள் தங்கள் ஊகங்களை எல்லாம் வெளிப்படுத்தி தங்களது அணிக்கான ஆதரவுகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். இவையெல்லாவற்றினையும் தாண்டி இவ் உலக கிண்ண T-20 போட்டிகள் இலங்கையில் நடைபெறுவது எல்லோருடைய வரப் பிரசாதமுமே.
அது மட்டுமில்லாது 2012 ல்உலகம் அழியப் போகின்றதாம் என்னவோ, ஏதோ மேல போறதுக்கு முன்னால ஒரு உலக கிண்ணத் தொடரின் போட்டிகளைப் பார்த்து விடும் அலாதியா ஆர்வமும் என்னைப் பொறுத்தவரை இல்லாமல் இல்லை.
 ஒரு மாதிரி ஒடியாடி இறுதிப் போட்டிக்கான டிக்கற்றுகளை வாங்கி முடித்தாயிற்று. தவிர முக்கியமான அதுவும் இலங்கை அணி பங்கு கொள்ளும் போட்டிகளின் ஒரு சில போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளும் கைவசம் இருக்கின்றன. இலங்கை அணிக்கான ஆதரவுக்காக அச்சிடப் பட்ட டீ-ஷேர்ட் டும் என் வசம் கிடைத்து விட்டது.


                

 இவற்றினை விட T-20 கிறிக்கட் போட்டிகளைக் கொண்டாட வேறென்ன வேண்டும்.
இவ்வாண்டின் 2012ன்  T-20 கிறிக்கட் போட்டியில் பங்கு கொள்ளும் அணிகள் சம்பந்தமான தனித் தனியான பார்வைக்கு இவ் இணைப்பினூடு செல்லுங்கள்.
இதற்கப்புறம் சொல்லுங்கள் யார் வசம் 2012ன்  T-20 உலகக் கிண்ணம் என்று...

இலங்கையில் நடைபெறும் போட்டிகள் என்பதால் இலங்கை அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கலாம். தவிர கடந்த வாரம் வழங்கப்பட்ட விருதுகளில் 3 முக்கியமான விருதுகள் இலங்கை அணியின் சங்காவின் பக்கம் இருப்பது எம்மணிக்குப் பலமே. இவற்றையெல்லாம் விட மலிங்கவின் பந்து வீச்சு முக்கியமாக பேசப்படுகின்றது. மத்யூஸின் கலக்கலானதும் பொறுப்பானதுமான ஆட்டம் எதிர்பார்க்கப் படுகின்றது. மெண்டிஸ் சுழலில் மீண்டும் யார் யார் சிக்கப் போகின்றனரோ தெரியாது. ஆரம்ப துடுப்பாட்டத்தில் மஹேல+டில்ஷான் ஜோடியை எதிர்பார்க்கலாம்.

                 

இலங்கைக்கு அடுத்த படியாக அதிகம் பேசப்படுவது இந்தியாவும், மேற்கிந்தியாவுமே தான்.
யுவராஜ் அணிக்கு திரும்பியிருப்பது, தொடர்ச்சியாக அசத்தி வரும் ஹோலி, டோனியின் அதிரடிகள், அணியின் ஒற்றுமையும் ,சிறப்பான களத்தடுப்பும் அவர்கள் மீதான எதிர்பார்ப்பிற்கு காரணமாயிருக்கின்றது.

மேற்கிந்தியாவைப் பொறுத்த வரை நரேய்னுடைய பந்து வீச்சினை இலகுவில் கணித்து துடுப்பெடுத்தாட எல்லோரும் சிரமப்பட்டதனை IPLல் காண முடிந்தது.
கிரான் பொலார்ட், கெய்ல், வேணாமப்பா வேணாம் என்று சொல்லுமளவிற்கு நொருக்கி எடுத்தவர் தான் இந்தக் கெய்ல், எந்த வீரருக்கும் இல்லாத தனிச்சிறப்பு கெய்ல் பக்கம், அடிக்க தொடங்கினால் அடித்து நொறுக்குவதை யாராலும் நிறுத்த முடியாததே. தவிர சிறப்பாக வளர்ந்திருக்கின்றனர்.
               

இவற்றினை விட சின்ன அணிகளும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காத்திருக்கின்றன. தென்னாபிரிக்கவையும், பங்களாதேஷையும் சுருட்டிப் போட்ட சிம்பாவே சாத்திதாலும் சாதிக்கலாம். ஏனைய சின்னச் சின்ன அணிகளும் மிகப்பெரிய அணிகளுக்கு சிம்ம சொர்ப்பனமாகலாம்.
                                    
                              

1996ற்குப் பின் எந்த உலக கிண்ணத்தினையும் இலங்கை கைப்பற்றவில்லையே என்று ஆதங்கப் படும் என்னைப் போல் பலருக்கு இலங்கை அணி என செய்யப் போகின்றது?
மாலை 7.30 மணி முதல் 19 நாட்களும் கொண்டாட்டமாகப் போகின்றன,இலங்கை அணி வெல்லும் பட்சத்திலே......

Saturday, September 15, 2012

முரளி இணக்க வெற்றிக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர்:. எனது பார்வையில்..

                       
2012ற்கான முரளி இணக்க வெற்றிக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர்  கடந்தவாரம் நிறைவு பெற்றிருக்கின்றது. பல கிறிக்கட் பிரபலங்கள், வீரர்கள் பங்கு பற்றியிருந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும், சொல்லும் படியாக யாருக்கும் தெரியாமலும் அமைதியாகவே நிறைவடைந்திருக்கின்றது.

                         

இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்து அணிகள் தெரிவு செய்யப்பட்டு T-20 போட்டியாக 5 மைதானங்களில் இடம்பெற்ற போட்டிகள் 5 நாட்களிலேயே நிறைவு பெற்றுள்ளது.
ஆண்கள் பிரிவிலே 19 வயதிற்குட்பட்ட 12 அணிகளும், பெண்கள் பிரிவிலே 23 வயதிற்குட்பட்ட  8 அணிகளுமாக மொத்தம் 20 அணிகள் 2012ற்கான முரளி இணக்க  வெற்றிக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரிலே பங்குபற்றியிருக்கின்றது.

                           

                         
5 மைதானங்களிலே 5 நாட்களிலே மொத்தமான 36 போட்டிகளும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் இடம்பெற்ற மாங்குளம் மகா வித்தியாலயம் , வவுனியா மத்திய கல்லூரி, ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி  ஆகிய மைதானங்களில் ஒரு சில அபிவிருத்திகள் தென்பட்டாலும் யாழ் மாவட்டதில் போட்டிகள் இடம்பெற்ற பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் அபிவிருத்திகள் எவற்றினையும் காணமுடியாதது எம்மவர்களைப் பொறுத்தவரை ஏமாற்றமே. ஏற்பாட்டாளர்களின் தவறோ அல்லாவிட்டால் நிர்வாகத்தில் ஏற்பட்ட தவறோ இதுவரை தெரியவில்லை.

                          

இவற்றினை மீறி எம்மவர்கள் உண்மையிலே சாதித்திருக்கின்றனர். அவர்களுக்கான வாழ்த்துக்களை முதலிலே பகிர்ந்து கொள்ளலாம். ஆண்கள் பிரிவிலே பலமானதும், புற்தரைகளி(TURF)ல் போட்டிகளில் ஈடுபடும் அணிகள் எல்லாவற்றையும் வென்று இறுதிவரை முன்னேறிய யாழ்ப்பாணப் பாடசாலைகளின் தெரிவு அணியினரின் திறமைகளுக்கு வானமே எல்லை.

                          

மாவட்ட மாகாணப் பயிற்றுனர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் லக்‌ஷித, மற்றும் ரவீந்ர புஷ்பகுமார வடபுலத்தின் கிறிக்கட்டினை வளர்த்தெடுக்கப் பாடுபடுகின்றமை புலப்படுகின்றது.

                            

பாடசாலைக் காலத்திலிருந்தே மாணவர்களினை கிறிக்கட் மீதான ஆர்வம் கொண்டவர்களாக வளர்ப்பதோடு, கிறிக்கட்டினை இளவயதில் புகுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது.

                          

சர்வதேசக் கிரிக்கட்சபை(ICC), GRANGE HOTEL, INDIAN OCEN DISASTER RELEF (IDOR), MAHELA FOUNDATION, EMIRATES, MAS HOLDINGS, FOUNDATION OF GOODNESS, AUSTIN MANAGEMENT LIMITED (AML), RED DOT TOURS ஆகிய பிரமாண்டமான நிறுனங்களை அனுசரணையாளர்களாக இணைந்து போட்டிகள் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டாலும் போட்டித் தொடரின் தரம் சொல்லும் படியாக இல்லை.
முற்று முழுதாக அணுசரணையாளர்கள் வீணடிக்கப் பட்டிருக்கின்றனர்.
ஏற்பாடுகள் கூட அவ்வளவு திருப்திகரமானதாக அமையவில்லை. வீரர்களின் உடையும்,இறுதிப் போட்டி இடம்பெற்ற மைதானமுமே ஓரளவு வரவேற்கக் கூடிய விடயம். 

அத்தோடு முற்று முழுதான இராணுவப் பிரசன்னமும் போட்டியின் தரத்தினை இழக்க செய்திருக்கின்றது.தவிர இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டவர்களிலே விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே இருந்தனர். தமிழர் பிரதேசத்திலே ஒரு தமிழனால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்விற்கே இந்தக் கதி என்றால் ஏனையவை பற்றி சொல்லவும் வேண்டுமா? 
                            

இலங்கையின் சாதனை நாயகன் முரளியின் பெயரில் முரளியால் இத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் போட்டி ஒழுங்கமைப்பிற்காக ஏற்பாட்டுக் குழு அமைக்கப் பட்டிருக்கலாம். அவ் ஏற்பாட்டுக் குழுவினரால் போட்டிகளின் ஒழுங்குபடுத்தல்கள்  ஏதும் நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம். அவர்களின் அந்த நிறுவனங்களின் தவறுகளிற்காக நாம் முரளி மீது குற்றம் சுமத்துவதில் எதுவித அர்த்தமும் இல்லை. தவிர கீழ் மட்டத்தில் இடம்பெறும் எல்லா விடயங்களும் மேல் மட்டங்களிற்கு செல்வதுமில்லை. அதனை கண்காணிப்பதற்கு மேல் மட்டங்களுக்கு நேரமும் கிடைப்பதில்லை.  
   
என்ன தான் இருந்தாலும் தொடர்ந்து வருகின்ற தொடர்கள் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமானதுமாக அமையும் என எதிர்பார்க்கலாம்...                                                                                                                                                                                                                                   

Friday, September 7, 2012

புற்தரை(TURF)யில் களமாடும் இந்து...வாழ்த்துக்கள்+எதிர்பார்ப்பு


வடக்கு தெற்கு நட்புறவை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு.ஆனந்தாக் கல்லூரி அணிகளிற்கிடையிலான நட்புறவுக் கிறிக்கட் போட்டி  ஆனந்தாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

                                

30 வருடமாக வடக்கிற்கும் தெற்கிற்குமான முறுகலை அகற்றி இன நல்லிணக்கம், நட்புறவு நோக்கி இப் போட்டி எம்மவர்களை நகர்த்திச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

இப்போட்டிகள் ஏனைய கல்லூரிகளிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது. அவர்களும் இது போன்ற போட்டிகளினை ஏற்பாடு செய்வதன் மூலம் தமது வீரர்களின் திறமைகளையும், உறவுகளையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட இரு பாடசாலைகளும் இம்மாதம்  7ம், 8ம்  களம் காண்கின்றன. இரு அணிகளும் மிகப் பலம் மிக்கவை என்பதால் போட்டியில் சூடு சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது என்பது கிறிக்கட் ரசிகர்களது கருத்து.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கிருஷோபன் தலைமையிலும், ஆனந்தக் கல்லூரி துஷார சமரக்கூன் தலைமையிலும் களமாடுகின்றது.

இந்துவின் அணி வீரர்கள்+திறமைகளுடன்

புற்தரை ஆடுகளங்கள் (TURF) எம்மவர்களுக்கு புதிது என்பதால்  ஆனந்தக் கல்லூரியினருக்கு அது சாதகமாக அமையலாம். எனினும் திறமைகள் அடிப்படையில் எமது வீரர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

இந்துக்கல்லூரியில் பாடசாலைக் கல்வியினைக் கற்று 20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு.ஆனந்தாக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக அரும்பணியாற்றி, தலைமை ஆசிரியர் பதவிக்கு வந்த திரு.வீ.டீ.எஸ்.சிவகுருநாதன் அவர்களினை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான போட்டிகள் இடம்பெறவுள்ளன. திரு.வீ.டீ.எஸ்.குருநாதன் பெயரில் இந்தத்தொடர் இடம்பெறுவது எமக்கும் பெருமையே.

இந்துவின் குழாம்
கடந்த ஒருசில வருடங்களிற்கு முன் இப் போட்டி ஏற்பாடுகள் இடம் பெற்றாலும் இப்போது தான் அது முற்றுப் பெற்றிருக்கின்றது. இடையிடையே ஏற்பட்ட தடங்கல்களும்,தவிர்க்க முடியாத காரணங்களும் போட்டியின் அரம்பத்தினை  2012 செப்டெம்பர் வரை தள்ளிப் போட்டிருக்கின்றன. இதற்கு கடுமையாக உழைத்த இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர் சங்கங்களிற்கு முதலிலே வாழ்த்துக்கள்.

இம் மாதம் 7ம்,மற்றும் 8ம் திகதிகளில் இடம்பெறவுள்ள இப்போட்டியின் ஆரம்ப நிகழ்விலே விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சர் பேராசிரியர். திஸ்ஸ விதாரண, ஆனந்தாக் கல்லூரி உருவாக்கித் தந்திருக்கும் தேசியக் கிறிக்கட் வீரர்கள், இலங்கை அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன, 1996 உலக கிண்ணத்தை இலங்கைக்கு வென்று தந்த அர்ஜூன ரணதுங்க உட்பட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


ஆனந்தக் கல்லூரியினர் 
 எம்மண்ணின் வீரர்களின் திறமைகளை வெளியுலகம் அறியவும், வீரர்களின் திறமைகள் அதிகரிக்கவும் இப் போட்டித்தொடர்கள் உதவும் என எதிர்பார்க்கலாம்.

பிரபல்யமான பதிவுகள்