Monday, January 7, 2013

ஒஸ்கார், ஆசியாவின் ஆச்சரியம், மானிப்பாய் பரிஷ் லியோ.


நேற்று இடவேண்டிய பதிவு. கால நிலை காரணமாக பிற்போடப்பட்ட நான் அங்கம் வகிக்கும் மானிப்பாய் பரிஷ் லியோக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்+கலை நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றமையால் பதிவிட முடியவில்லை.
முதலிலே தமிழரின் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அத்தோடு ஆசியாவின் ஆச்சரியமான மன்னர், மானிப்பாய் பரிஷ் லியோவின் ஒன்று கூடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் சேர்த்து இடுகையிடுகின்றேன்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.
                     
அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
                                

இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருது, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, (9 முறை தொடர்ந்து பெற்றார்) ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
                               

சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டது.
மீண்டும் இசப்புயலிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆசியாவின் ஆச்சரியம்.
உலகக்கிண்ண கொண்டாட்டங்களுக்குள் நாசூக்காக எரிபொருட்களின் விலையேற்றிய நம்ம மாமா மீண்டும் எரிவாயுக்களின் விலையையும் கூட்டியுள்ளார். கிடைக்கும் வருமானம் நாட் செலவுக்கே போதவில்லைப் போலும். நல்ல வேளை பொங்கல் பரிசாக இவ் விலையேற்றத்தை தரவில்லை.
                       
அத்தோடு பொங்கலோடு பொங்கலாக மாமா யாழ்ப்பாணம் வர திட்டம் தீட்டியிருக்கின்றார் என்று கதைகள் கசிகின்றன. நயினை அம்மனையும் கும்பிடப் போகின்றாராம். அம்மாளாச்சி இவனுகளுக்கு ஒரு காட்டு காட்டு. எங்களப் போட்டு படுத்தின பாட்டுக்கு.
இப்படி அப்பப்ப வந்தாத்தான் மாமா பயணிக்கிற வீதிகளாவது “காப்பற்”றைக் காணும். அது போக மாமாவை யாழ்ப்பாணத்தில வைத்து யார் வரவேற்கின்றதென்று மூன்று பேருக்கிடையில் கடும் பனிப்போராம். இரண்டு பேரை எல்லாருக்கும் தெரியும். மூன்றாமவரும் விரைவில் திரைக்கு வரலாம்.

மானிப்பாய் பரிஷ் லியோக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்
சமூகத்திற்கு சேவையாற்றுவதை மட்டுமே நோக்காக கொண்ட  லியோக் கழகத்தினைப் பொறுத்த வரை ஒன்றுகூடல் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியான செயற்திட்டம்.
                                        

2012ம் ஆண்டின் வருட இறுதி ஒன்று கூடல் கால நிலை காரணமாகவும்
வெள்ள நிவாரணங்களை சேகரித்தல் காரணமாகவும் உரிய திகதியில் இடம்பெறாமல் போனது. நேற்றைய தினம் இவ் நிகழ்வுகள் தாய்க் கழகமான மானிப்பய் பரிஷ் லயன்ஸ் கழகத்தினரின் வருகையோடு சிறப்பாக  நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது.
சகல முறையிலும் ஒத்துழைப்புகளை வழங்கிய லியோக்கள், லயன்ஸ் அனைவரிற்கும் நன்றிகள்.
எல்லா விடயங்களையும் பகிர்ந்தால் எனக்கு நேரமின்மையுமும், உங்களுக்கு சலிப்பும் ஏற்படலாம்.
நேரம் கிடைக்கின்ற போது அவை சம்பந்தமாக மேலும் பகிர்கின்றேன்.
புகைப்படங்கள் பார்த்தவர்களிற்கும், பார்க்காதவர்களுக்கும் சேர்த்து....

LEO'S NIGHT.

4 comments:

  1. இப்படி அப்பப்ப வந்தாத்தான் மாமா பயணிக்கிற வீதிகளாவது “காப்பற்”றைக் காணும். அது போக மாமாவை யாழ்ப்பாணத்தில வைத்து யார் வரவேற்கின்றதென்று மூன்று பேருக்கிடையில் கடும் பனிப்போராம். இரண்டு பேரை எல்லாருக்கும் தெரியும். மூன்றாமவரும் விரைவில் திரைக்கு வரலாம்///////

    மூன்றாமவர் வெளியில் வராமல் இருந்தால் எல்லாருக்கும் நல்லது போல இருக்கே! :P நல்ல பதிவு அண்ணே. உங்களின் புகைப்படங்கள் பார்த்தேன். பணிகள் தொடரட்டும்!! :)

    ReplyDelete
  2. இதிலே ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரிக் கிடக்கே ;) யாரந்த மூன்றாமவர் என்று ஊகிக்க முடிந்ததா?
    நன்றி குமரா, அடுத்தடுத்த செயற்திட்டங்களிலே உனது படமும் காண ஆசை :)

    ReplyDelete
  3. மாமா கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் காரணமாக கால நிலையை சாட்டு போட்டாக சொல்லி விட்டு வரவில்லை என்று அறிவித்து இருக்கிறார்கள்.அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர்.இதில் எந்த ஆண்டு என்று குறிப்பிடவில்லை.தயவு செய்து இப்படி பிறப்பு பற்றி ஏதேனும் எழுதும் போது ஆண்டை சரியாக குறிப்பிடுங்கள்.
    மற்றையது உங்கள் இடுகைகளை இடும் போது படங்களை இரு பக்கமாக சேர்த்து கட்டுரை வாசிக்க இடையூறு இல்லாமல் பதிவு செய்தால் படிப்பதற்கு ஆசையை தூண்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நிற்சயமாக, உங்களது விமர்சனங்களை வரவேற்கின்றேன்.இனி வரும் பதிவுகளிலே தவறுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்கின்றேன்.
    தொடர்ந்தும் வாசியுங்கள், விமர்சியுங்கள்.

    ReplyDelete

பிரபல்யமான பதிவுகள்