Friday, June 8, 2012

பாரதியை முழுமையாக படியுங்கள் !


பாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகின்றேன் .
                       

பாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் .
எப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக  சொல்லலாம்
முக்கியமாக "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே!
எட்டு திக்கும் சென்றோம் இங்கே கொண்டு வந்து சேர்த்தோமா என்பதே கேள்வி ? அங்கேயே சென்று இருந்துவிட சொல்லவில்லை பாரதி .
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவது எங்கும் காணோம்; "
இதனை கூறிவிட்டு நாம் நிறுத்தி விடுவோம் . பாரதி வெறுமனே மொழியின் புகழ் பாடிவிட்டு நிறுத்திவிடவில்லை . அவன் புரட்சிக்கவி . சாதாரண கவிஞர்கள் போல் அல்லாததால தான் இன்னமும் உயிர் வாழ்கிறான் .
பாமர ராய்விலங்குகளாய்உலகனைத்தும் 
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டுநாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு      
வாழ்ந்திடுதல் நன்றோசொல்லீர்
மொழியின் அழகை உணர்ந்தவர் அதன் தொடர்ச்சியை விரும்பியவர் .அதனோடு நிறுத்திவிடவில்லை .அதற்கு வழியும் சொல்லி இருக்கிறார் . மேலே உள்ள வரிகளை கவனிக்கும் பலர் அவர் காட்டிய வழியில் பயனிப்பதில்லை என்பது நிதர்சனம் .
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்  
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்   
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;   
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
                               
நாம் வெளிநாட்டவரை ,வெளிநாட்டு மொழிகளை வணக்கம் செய்கிறோமே  தவிர அவர்கள் எம் மொழியை எம்மை பின்பற்றவேண்டும் என்று நினைப்பதில்லை .
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்      பரவும்வகை செய்தல் வேண்டும்


சொல்லவும் கூடுவ தில்லை-அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தானஇந்த வசையெனக் கெய்திட லாமோஎன்று முடித்திருப்பார் .அதற்கான வழியையும் முன் வைத்தான் .நாம் அதனை பின்பற்றுகிறோமா!சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!இப்படி செய்தால் யார் யார் எல்லாம் விழித்து கொள்வர் என்றும் கூறுகின்றார்  

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லா
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்   
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
என்னை கவலைகள் தின்னத்தகாதேன்று நின்னை சரணடைந்தேன் என்று பாரதி கூறியது .பணம் என்ற இந்த அற்ப துன்பங்களால் மக்களுக்கும் ,நாட்டுக்கும் ,மொழிக்கும் தான் செய்ய இருந்த செயல் முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் தான் பாடினான் . இந்த வரிகளை நாம் எமது அற்ப  துன்பங்களுக்கே பயன்படுத்துகிறோம் .
பாரதியின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம் ! 

Wednesday, June 6, 2012

வாழ்த்த வயதில்லை எனக்கு: லோசன் அண்ணா


நேற்று இடவேண்டிய பதிவு.நண்பன் ஒருவரின் தந்தையின் மரணவீட்டிற்கு சென்றமையால் காலம் தாழ்த்தி இடுகின்றேன்.உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே பிரசவிக்கின்றேன்.
வாழ்த்த வயதில்லை எனக்கு.இருந்தும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .எளிமையான இளமையான ஒருவர் பிறந்து இன்றுடன் 35வருடங்கள்.(வயதில் மட்டும்)
ஆரம்பத்தில நான் லோசன் அண்ணாவின் ரசிகன் ஆனது சூரியனில் இடம்பெற்று வந்த “அட்டகாசம்” கேட்டுத்தான்.விளையாட்டில் நடக்கும் எல்லா விடயங்களும் பிரித்து மேயப்படும் நிகழ்ச்சியாக அது அமைந்தது.பின் காலவோட்டத்தின் மாறுதல்களும்,சூழ்நிலமைகளும் அந்த கம்பீரக்குரலினை கேட்பதனை சற்று தாமதமாக்கின.


எனினும் எனக்கும் விருத்தெரியத்தொடங்க முகப்புத்தகம்,டுவீட்டர் என இணையத்தளங்களை உபயோகிக்கத்தொடங்கினேன்.சில நாட்களின் பின் ஓர் ஆவலில் லோசன் என முகப்புத்தகத்தில் சல்லடை போட்டபோது சிங்கம் சிக்கியது.
நண்பராவதற்கு விண்ணப்பித்தபோது(request) சில மணித்துளிகளில் அவ் விண்ணப்பம் ஏற்று(accept) க்கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை வழிகாட்டி வழிப்போக்கன் உறவாக அண்ணன் தம்பி உறவாக வளர்ந்துகொண்டிருக்கின்றது.அதன் பின் அண்ணாவின் முகப்புத்தகத்தினூடாக வெற்றி எஃப்.எம் தொடர்பான தகவல்களை வைத்து அறிந்து கொண்டேன் சிங்கம் இன்னும் கர்ச்சிப்பதனை தொடர்கின்றது என.எனினும் முகப்புத்த்கத்தில் தகவல் பரிமாற்றங்களின் பின் இணையத்தில் ”வெற்றியின் விடியலையும்” ரசிக்கத்தொடங்கிவிட்டேன்.https://www.facebook.com/VettriyinVidiyal
அதன் பின் எப்போது யாழ்ப்பாணத்திற்கு அலைவரிசை விஸ்தரிப்பு என்று ஒரே ஆப்படித்துக்கொண்டிருப்பேன்.நல்ல ஞாபகம் கடந்த வருடம்(2011) ஆடி மாதம் என நினைக்கின்றேன். வெள்ளிக்கிழமை.அண்ணனின் V FOR VETTRI,V FOR விளையாட்டு நிகழ்வினை www.vettrifm.com ஊடாக ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் யாழ் மண்ணில் இப்பொழுது முதல் 101.5ல் வெற்றி கேட்கலாம் என்றார் லோசன் அண்ணா.யாழ்ப்பாணத்தில் முதலில் அலைவரிசை விஸ்தரிக்கப்பட்டதும் பாடல் ஒன்றை விரும்பிக்கேட்டவன் என்பதிலே இறுமாப்பு எனக்கதிகம்.
·         Ana very happy 2 meet u through 
#v-vettri v- vilayatu
very clear& base @ jafna. Ana kampi mathappu song plz....
Ushanthan
manipay.
இது எனது செய்தி. அதற்கான பதில்
·         will ask Ruban to play that song later after 12 
இப்படியாக தொடர்ந்த போது தான் JPL (Jaffna Premier League)பற்றி சிந்தித்தோம். அதற்கு வெற்றி எஃப்.எம் தான் சரியான வானொலி எனபதற்கிணங்க அதனை லோசன் அண்ணாவிடம் சமர்பித்த போது உடனடியாக சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டது.இன்று வரை JPL (Jaffna Premier League) மிகச்சிறப்பாக செல்வதற்கு வெற்றி எஃப்.எம்https://www.facebook.com/VettriFMOfficial மிகச்சிறந்த முறையில் ஊடக அனுசரணையினை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
முக்கியமாக ஒரு விடயம் இதுவரை நான் லோசன் அண்ணாவை நேரில் பார்த்தது இல்லை.ஆனால் முகப்புத்தகம்,டுவீட்டர்,வலைப்பதிவுகளை பார்த்து மலைத்திருக்கின்றேன்.

மற்றொரு முக்கியமானது நான் வலைபதிவிடத் தொடங்குவற்கு காரணமாக இருந்ததும் லோசன் அண்ணவின் வலைப்பதிவுகள் தான்.
தனித்துவமான குரலும்,சிறப்பான நிகழ்ச்சித்தொகுப்பும்,ஆர்ப்பாட்டமில்லத,ஆடம்பரமில்லாதசாதாரண தன்மையும்,சில விடயங்களை அண்ணாவோடு பகிர்கின்ற போது பெருந்தன்மையோடு நன்றி உஷாந்தன் என்பதும்,ஏனையோரையும் தட்டிக்கொடுப்பதும்,சகலரையும் மதிப்பதும் அண்ணாவிடம் எனக்குப்பிடித்தவை.*    
 சாமி எனக்கும் ஒருவரம் வேணும்,குடுப்பீங்களா?
JPL (Jaffna Premier League)https://www.facebook.com/groups/296786493746261/ன் இறுதிப்போட்டியில் சந்திக்கும் ஆவலுடன்…..

பிரபல்யமான பதிவுகள்