Wednesday, December 14, 2011

நட்பு!




ஊரின் விளிம்பில்
அதோ நானும் என் நண்பனும்
அழுதுகொண்டே சந்தித்த முதல்
பள்ளி

பள்ளிக்குப் போகமாட்டேன்
என்று கட்டிப்பிடித்துக் கொண்ட
மரம்

 

ஒன்றாய் உட்கார்ந்து
அரட்டை போட்ட மரத்தடிப்
பாறை

அடிவாங்கி
முழங்காலின் நின்ற
வகுப்பறை வாசல்

கரஇடி வாங்கி
மகிழ்ச்சியாய் நின்ற
மேடை

பாடசாலை கீதம்
தினமொலிக்கும்
ஸ்பீக்கர்

கரண்ட் இல்லாத நேரத்தில்
பாவிக்கப்படும்
மணி

நண்பனுக்காக
சண்டை போட்ட
ரகசிய இடம்

சமயத்தில்
தப்பியோட உதவிய
கழிவுக் கால்வாய்

மாணவத்தலைவனால்
பெப்சி கிறிக்கெட் கார்ட்
பறிக்கப்பட்ட
இடம்

முடிவெட்டாமல்
வந்து அடி வாங்கிய
இடம்

நீயும் பெயிலா
நானும் பெயில்டா
என்று அகமகிழ்ந்த
இடம்

வாசல் கேற்
பஸ் தரிப்பு நோக்கி
நீளும் நெடும் பாதை
பிரதான வீதி

பஸ் தரிப்பிடம்
பெண்கள் பாடசாலை
மாங்காய்க் கடை
ஐஸ் விக்கும் சைக்கிள்

ஐஸ் பால் கடை
கொய்யாப் பழக்கடை
தினம் செல்லும்
சாப்பாட்டுக் கடை

அங்கும் நட்பு
இங்கும் நட்பு
அதிலும் நட்பு
இதிலும் நட்பு

அவற்றில் நட்பு
இவற்றில் நட்பு

பக்கத்தில் நட்பு
தற்போது என் எதிரிலும்
புன்னகைத்தபடி
நட்பு!.....

Monday, December 12, 2011

பாரதி
பாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகிறேன் .

பாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் .
எப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக  சொல்லலாம் . 

முக்கியமாக "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே ! 


புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! 
     இந்த வசையெனக் கெய்திட லாமோ? என்று முடித்திருப்பார் .

அதற்கான வழியையும் முன் வைத்தான் .நாம் அதனை பின்பற்றுகிறோமா!
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


எட்டு திக்கும் சென்றோம் இங்கே கொண்டு வந்து சேர்த்தோமா என்பதே கேள்வி ? அங்கேயே சென்று இருந்துவிட சொல்லவில்லை பாரதி .


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
 இனிதாவது எங்கும் காணோம்; "

இதனை கூறிவிட்டு நாம் நிறுத்தி விடுவோம் . பாரதி வெறுமனே மொழியின் புகழ் பாடிவிட்டு நிறுத்திவிடவில்லை . அவன் புரட்சிக்கவி . சாதாரண கவிஞர்கள் போல் அல்லாததால தான் இன்னமும் உயிர் வாழ்கிறான் .



பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் 
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம்      பரவும்வகை செய்தல் வேண்டும்.

மொழியின் அழகை உணர்ந்தவர் அதன் தொடர்ச்சியை விரும்பியவர் .அதனோடு நிறுத்திவிடவில்லை .அதற்கு வழியும் சொல்லி இருக்கிறார் . மேலே உள்ள வரிகளை கவனிக்கும் பலர் அவர் காட்டிய வழியில் பயனிப்பதில்லை என்பது நிதர்சனம் .

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்  
 தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்   
 சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;   
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

நாம் வெளிநாட்டவரை ,வெளிநாட்டு மொழிகளை வணக்கம் செய்கிறோமே  தவிர அவர்கள் எம் மொழியை எம்மை பின்பற்றவேண்டும் என்று நினைப்பதில்லை .

இப்படி செய்தால் யார் யார் எல்லாம் விழித்து கொள்வர் என்றும் கூறுகின்றார்  .

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்   
 இங்கமரர் சிறப்புக் கண்டார்.

என்னை கவலைகள் தின்னத்தகாதேன்று நின்னை சரணடைந்தேன் என்று பாரதி கூறியது .பணம் என்ற இந்த அற்ப துன்பங்களால் மக்களுக்கும் ,நாட்டுக்கும் ,மொழிக்கும் தான் செய்ய இருந்த செயல் முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் தான் பாடினான் . இந்த வரிகளை நாம் எமது அற்ப  துன்பங்களுக்கே பயன்படுத்துகிறோம் .

பாரதியின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம் ! 

Thursday, September 15, 2011

நிலை மா(ற்)றுமா????????

சமயம் என்னும் போது வாழும் முறை எனப்படுகிறது .ஒவ்வொரு சமயங்களும் மிக நீண்ட வரலாறுகள் ,அற்புதங்கள், பெருமைகளை தன்னகத்தே கொண்டிருகின்றன. சமயங்கள் பல மனிதர்களை மகத்தான பாதையில் பயணிக்க வைத்திருகின்றது.வாழ்வியல் ,பண்பாடு,கலாசார நிலைமைகளை தொடர்ந்து பேண சமயங்கள் கை கொடுத்திருக்கின்றன.சமயத்தின் பெயரால் வாழ்ந்தவர்கள் பலர்! சமயத்திற்காக வாழ்ந்தவர்கள் சிலர்!! ஏமாற்று  வித்தைகாரரும்,ஏமாளிகளும் இல்லாத  இடமே இல்லை எனலாம்.இவ்வாறு மாறிவிட்ட பூமியில் மனிதன் மனிதனாக வாழ வேண்டுமல்லவா?
அழகிய ஈழமணி திருநாட்டிலே இந்துக்கள்,கிரீஸ்தவர்கள்,பௌத்தர்கள்,இஸ்லாமியர்கள் வேறுபாடு இல்லாது வாழ்ந்து வருகின்றமை வரவேற்கத்தக்கது.இருந்தும் சமயத்தின் பெயராலே பல மூட நடவடிக்கைகள் வாழ்வியல் உண்மைகளை சாகடித்துக்கொண்டிருக்கின்றன. எல்லா மதங்களையும் வழிபடுபவர்களில் நானும் ஒருவன்.மதம் ஒன்றே அது அன்பெனும் மதம்.அன்பாலே அகிலத்தை ஆளலாம் என்றன் தமிழ்க்கவி.அன்புடையார் எல்லாம் உடையார் என்றார் வள்ளுவர்.
ஒவொரு சமயமும் அன்பின் வழியை அழகாக சொல்லியிருகின்றன.ஒரு கன்னத்தில் அறைந்தவநிற்கு மறு கன்னத்தை காட்டியவர் இயேசு பிரான்,ரொட்டி துண்டுகளையும் பேரிச்சம் பழங்களையும் அன்புடன் பரிமாறியவர்  நபிகள் நாயகம்,நாட்டின் துன்பங்களிட்காக நாட்டை விட்டு வெளியேறியவர் புத்த பகவான்,செம்மணச்செல்விக்காக பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவர் சிவபெருமான்,மிருகங்களை கொல்லக்கூடாது என்பதற்காக அவற்றை வாகனமாக்கியவர்கள் இந்துக் கடவுள்கள் .இறைவன் கூறிய வழிகளையே மக்கள் பின்பற்றுகின்றனர்.அப்படியிருந்தும் சமயத்தை தம் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்ற சிலராலே சமய புனிதங்கள் கேடுககபடுகின்றன.சிதைக்கபடுகின்றன.
அண்மையிலே பரபரப்பாக பேசப்படுகின்ற விடயம் மிருக வதை.இவ் மிருகங்களை பலியிடுதலை சட்டம் ஒன்றை கொண்டு வந்தே தடுக்கும் அளவிற்கு மக்கள் மனம் மாண்பு பெற்றிருக்கிறது.
என் கையிற்கு வந்தால் தான் காயம், எனக்கு நேர்ந்தால் தான் சோகம் என எண்ணும் நிலை மாற வேண்டும்.எவ் உயிரும் என் உயிர் போல எண்ணி இரங்க அருளாய் பராபரமே என்கிறார் தாயுமானசுவாமிகள்.எம்முடைய  அதிகாரம் எம் மூக்குநுனி வரையே! அடுத்தவனை தொடக்கூட எமக்கு அதிகாரமில்லை.அப்படியிருக்கின்ற போது இன்னொரு உயிரை கொல்கின்றவநிட்கு என்ன தண்டனை?அவர்களிற்கு என்ன மனத்தைரியம்??
மன்னன் மகனின் தேர்சில்லில் அகப்பட்டு கன்று இறந்தமைக்காக ஆராட்சிமணியை அடிக்கின்றது பசு.உடனே அதற்கு  காரணமான தான் மகனை தேரின் கீழே கிடத்தி அவன் மீது தேரை ஓடச்செய்கிறான் மனுநீதிச்சோழன்.
ஆலயங்களின் பெயராலே பொங்கல்,மடை,தானங்கள் மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.அவற்றின் பிற்பாடு நியாயமான காரணம் இருக்கிறது.அனால் இவ் மிருகபலிக்கு என்ன காரணம்?ஒரு வேளை உணவிற்கு புசிப்பதற்காக இறைவன் பெயரால் கொலை செய்வதில் என்ன நியாயம்?இறைவன் பெயரால் நாடகமாடும் சமயவாதிகளின் நிலை எல்லைகடந்துவிட்டது.ஒரு நிமிடநேரத்தில் ஓராயிரம்உயிர்கள் கொல்லப்படுவது ஏற்றுகொள்ளமுடியாதது.ஒரு வேளை கொலப்படுகின்ற உயிர்கள் பேசக்கூடியனவாக இருந்திருந்தால் கொல்லப்படுவதற்கு முன் என்னசொல்லியிருக்கும்? சிந்தித்து பார்போம்!!அயல் நாட்டிலே மூன்று மனிதஉயிரிட்காக போராடிக்கொண்டிருக்கும் போது ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பபட தயாராக இருந்திருக்கின்றன.அவை ஏதும்  பேசமாட்டதவை என்பதால் தானோ யாரும் அந்த மிருகங்களிட்காக போராட யாரும் முன் வரவில்லை?
அவற்றை கொல்வதால் அதுவும் ஆலயத்திற்கு முன்பாக வைத்து கொல்வதால் என்னபலன் ஏற்டபட்டுவிடப்போகின்றது? சமயத்தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்!எந்த சாமி தனக்கு வேள்வி தா எனக்கேட்டது?அன்பையும்,அருளையும் தரும் சாமி அப்பிடிக்கேட்குமா? சிந்தியுங்கள் மானிடர்களே!!
   காட்டிலே தேருந்து செல்கிறான் பாரி,குழைந்து கிடந்த முல்லைக்கொடி கொழுகொம்பு இல்லாது வாடிவதங்குவதை பார்க்கிறான்.அது ஒரு கொடியே என்ற எண்ணத்தை அறவே மறந்து விடுகிறான். முல்லைக்கொடியை பார்த்து வேதனைபடுகிறான்.அந்த கொடிக்காக தன் பட்டது தேரை ஈர்ந்துவிடுகிறான்.
வேடன் கையில் அகப்பட்ட புறாவை பார்க்கிறான் சிபிச்சக்கரவர்த்தி,வேடனுக்கு விருந்தாகப்போகிறதே என்று வேதனைபடுகிறான்.தன் உடலில் இருந்து அந்த புறாவின் எடைக்கு சமனான தசையை வெட்டிகொடுத்து அந்த புறாவின் உயிர் காக்கிறான் உத்தமன்!!ஒரு கன்னத்தில் அறைந்தவனிட்கு மறு கன்னத்தை காட்டியவர் இயேசு பிரான்!!நாட்டின் துன்பங்களிட்காக நாட்டை விட்டு வெளியேறியவர் புத்த பகவான்
இப்படியான புனித பூமியில்பிறந்த நாம் உயிர்களின் மேல் அன்பு செலுத்த தவறுவது என்?? 
வேறொரு மதத்தை சேர்ந்த ஒருவரால்,அதுகும் அரசியல்வாதி ஒருவரால்  தான் கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால் சமயம் எதட்கு??உண்மையில் அந்த மிருகங்கள் காப்பாத்திய  அந்த அரசியல்வாதியை நன்றியோடு பார்த்திருக்கும் ,வாள்த்தியிருக்கும் எமக்கு எமக்கு  என்று கட்டுக்கோப்புகள் இல்லையா??சமயத் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? உண்மையில் அவர்கள் இதை தடுக்க முடியாவிட்டால் பின்பு எதற்கு அவர்கள்????????????????ஆன்ம லயப்படும் ஆலயத்தில் இதனை மேற்கொள்வது சரியா?

Sunday, September 11, 2011

துறை தெரிவு

பெருமை???

                               

முதல் பதிவு என்றபடியால எதை  எழுதுவது?  எப்பிடி எழுதுவது??  என்ற வினாக்கள் என்னை வதைக்கின்றன.  இருந்தும் இப்ப விளையாட்டுகள் கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கிரதாலே,   அதை பற்றி எழுதுவம் எண்டு யோசிச்சன் . அதுவும் எங்கட ஆக்களுக்கு கிரிக்கட் எண்டால் தலைகால் புரியாத  மகிழ்ச்சி!!  
கிரிக்கட் ஆரம்பிச்சதெல்லாம் பெரிய வரலாறாம்!  கனக்க கனக்க மாத்தி  தானாம்
இந்தளவில வந்ததிருக்கெண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.
எனக்கு கிறிக்கட் பற்றிப்பெருசா  ஒண்டும் தெரியாது பாருங்கோபட்டை பிடிச்சு வார பந்தை அடிக்கவும், பந்த விக்கட்டுக்கு  போடவும், ஆரும் அடிக்கிற பந்த ஓடி பிடிக்கவும் தான் தெரியும். 
இதுக்குள்ள கல்லூரியில  நடந்த ஒரு விஷயம் .ஒருத்தரும் கோவிக்காதேங்கோ. எழுதினாப்பிறகு சிலரை சந்திக்க நேர்ந்தால் என் கதை கந்தல்! 
யாரோடையும்  மனத்தையும் புண் படுத்துவது  எனது  நோக்கம் அல்ல
எங்கட கல்லூரிக்கும் மத்திய  கல்லூரிக்கும்  ஒரு கிரிக்கட் மட்ச்.  நான்  நினைகிறன் நாலு வருஷம் இருக்கும்  இது நடந்து பாருங்கோ! . கிருஷ்சோபனும் எங்கட டீம்ல  இருந்தவன்கொஞ்சம் குண்டு எண்ட படியா எங்கட 'கோச்அவனை ஸ்லிப்பில விட்டவர்.அந்த  மச்சில தான் இது  நடந்தது!!!. கிருசோபன்க்கும் அப்ப விளையாட்டு  துறைக்கு பொறுப்பா  இருந்த சேருக்கும் சின்ன கேம் முன்ன பின்ன கிரவுண்டுக்கு வராத அந்த சார்   அண்டைகெண்டு வந்திட்டார். எங்களுக்கு எண்டா பெரிய அதிசயம் நாலு  வருசமா கிரவுண்டுக்கு வராத சார் வந்தா  பின்ன என்ன???? . 
அந்த நேரம் பாத்து மத்திய   கல்லூரிகாரங்க அடிக்க வெளிகிட்டாங்க. உடன சூடான சார் சிலிப்சில நிக்கிற கிருஷ்சோபன் ஏன் "வாக்" பண்ம    நிக்கிறான்எண்டார்!!!! . 
விளங்கினாசிரியுங்கோ!! மற்றவைஇருட்டின பிறகு லைட்போஸ்ட்டில ஏறி நிண்டு சிரியுங்கோ!!!இப்பிடியான ஆக்கள்இருக்கிற வரைக்கும் எங்களுக்கு விடிவே இல்லை!!!!!!!!!!!!!!!!!! 

Saturday, September 10, 2011

INITAL BLOGGING

முதலாவது பதிவுடன் சில மணி நேரத்தில் !
எதை பற்றி எழுதுவோம் கொஞ்சம் சொல்லுங்களேன் ?

பிரபல்யமான பதிவுகள்