Sunday, March 25, 2012

மறந்துவிடாதே?

பெறுதற்கரிய பேறாகிய மானுடப் பிறப்பினை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தது சரியாக பயன்படுத்துகின்றார்கள் என்பது வியப்பிற்குரியதே!மனிதனிற்கு எதற்கு ஆறாவது அறிவாக பகுத்தறிவு படைக்கப்பட்டது?எது சரி எது பிழை என உணர்ந்து வாழ்வதற்கே ஆனால் மானுடங்கள் இதனை உணர தலைப் படுகிறார்களில்லை.ஐந்தரிவு ஜீவன்களை இம்சைப்படுத்தி முடித்து விட்டு தம் இனத்திடையே கைவரிசையினை காட்ட தொடங்கி விட்டார்கள்.
நேற்றைய பத்திரிகை செய்தியினை வாசித்த போது இதனை தடுக்க யாரும் முன்வரமாட்டார்களா? பெரும் புள்ளிகள், அரசியல் மேதாவிகள் என தம்மை தாமே கூறிக்கொள்ளும் சிலர் எதையும் இதற்காக செய்ய மாட்டார்களா?தம்மையே நாட்டின் காவலர்கள் எனக் கூறும் சிலர் கண்ணில் இவையெல்லாம் பட மாட்டாதா? என்று எண்ணினேன்.

எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்றான் நியுட்டன்.நாம் மட்டவர்களை மரியாதை செய்யும் போது தான் நாம் மதிக்கப் படுவோம் என்பது எழுதப்படாத வழக்கம்.
அப்படியிருக்கின்ற போது இரோப்பிய இனத்தினை சேர்ந்த மிகப் பெரிய நல்லினக் காளை மாடு ஒன்று யாழ் வீதியில் ஐந்து சந்திப் பகுதியில் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சுமார் 2500 ராத்தல் எடை கொண்டதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெட்டப்பட்டு விற்கப்படவுள்ளதாகவும் அச் செய்தி தொடர்ந்தது.
சற்று சிந்திப்போம்,அந்தக் காளையினை வெட்டுவதால் அப்படி என்ன பலன் தான் ஏற்பட்டுவிடப் போகின்றது?நமது வயிறென்ன சுடுகாடா?
சுடுகாட்டிலே தான் இறந்த உடலங்களை தகனம் செய்வது வழக்கம்.
தவிர எமது சொந்தங்களை கொன்று குவித்தவர்களை நாம் சும்மா விட்டோமா?
அப்படியானால் அந்தக் காளைக்கும் நெருங்கிய சொந்தங்கள் இல்லையா?அதன் கன்றுகள் சுற்றம் எமக்கு சாபமிடும் இல்லையா?
இப்படிக் செய்தால் மனிதரிட்கும் அரக்கரிற்கும் என்ன வித்தியாசம்?
ஒன்று மட்டும் உறுதியாகப் புரிகின்றது.நாம் எமது தலைமைத்துவத்தினை இழந்தமையாலே சின்னாபின்னப்பட்டு சிதறிக் கிடக்கின்றோம்.ஓர் உயிரை கொன்று உண்பதிலே தான் இன்பம் என்றால் மனைவி,மக்கள்,சொந்தங்களை கொன்று உண்ணலாம் தானே?அவர்களிட்குத்தான் மனம் வராதே.அப்படியானால் அந்த ஐந்தறிவு ஜீவன்களையும் உங்கள் உறவுகளாக நினையுங்கள்.அது மட்டுமின்றி மனிதன் தாவர உண்ணியாக வாழ்வதற்கு ஏற்ற வகையிலே படைக்கப்பட்டுள்ளான் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
எனினும் அது ஐந்தறிவு ஜீவன்கள் அவை பேச முடியாதவை என்பதற்காக அவற்றை நாம் இம்சிக்க முடியுமா?
கத்திஎடுத்தவனிக்கு கத்திதான் முடிவு என்பது காலம் தந்த பாடம்.
சரி அந்தக் காளை உங்கள் வயலில் வேலை செய்யவில்லையா?
உங்களை சுமந்து செல்லவில்லையா?நீங்கள் அந்த காளையின்உடலில்மாறாத வடுக்களை இட்ட போது அது உங்களை ஏதும் செய்ததா? நான்வேலைசெய்ய மாட்டேன் என்று உங்களைப் போல் பகிஸ்கரித்ததா? அது நோயால் வீழ்ந்த போது நீங்கள் விட்டீர்களா?அதன் மூக்கை துளைத்தீர்களே?
அதனை துன்புறுத்தி வேலை வாங்கியதற்குப் பிற்பாடு அதனது வினைத்திறன் குறைந்துவிட்டது என்பதற்காக அதைக் கொல்லலாமா? 
சுயநலம் மிக்க மனிதக் கூட்டம்.
உங்களிக்கு எதற்கு ஒய்வூதியம்? மனிதனிற்கு வினைத்திறன் குறையும் போது மனிதனையும் கொல்லலாம் அல்லவா?
வியப்பாக இருக்கின்றது இல்லையா?
என என்னும் போது இன்றைய நாளிதழ் என் கரத்தில் தவழ்ந்தது.என்ன அருமை,இரவெல்லாம் நான் தூங்க முடியாது தவித்தற்கு பலன் கிடைத்துவிட்டதா?என்ன ஒரு நிர்வாகம் என அரச அதிபரை எண்ணி வியக்கின்றேன்.
"இறைச்சிக்காக கொள்வனவு செய்த காளை மாட்டை வெட்ட தடை,அரச அதிபர் உத்தரவில் போலீசார் நடவடிக்கை"
என்று அந்த செய்தி எனக்கும் என் போன்ற உயிரின ஆர்வலர்களிட்கும் அமைதியை தந்தது.
புல்லாகி போதாகி புழுவாகி மரமாகித் தான் இப் பிறப்புக்கள் அந்தக் காளையாகின்றது.மனிதா நீயும் ஒரு பிறப்பில் காளையாவாய்,உன்னையும் கட்சிப் பொருளாக்கி வெட்டுவார்கள் மறந்துவிடாதே?:::::::::
“கொல்லான் புலானை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும்”
                                                                                                                          -வள்ளுவர்-

பிரபல்யமான பதிவுகள்