Monday, July 23, 2012

"சூர்யா":- மனங்கவர்ந்த நாயகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


வ்வொருவரிற்கும் ஒவ்வொரு நாயகன் இல்லாமல் இல்லை. என்னை கேட்டால் சூர்யாவுக்கே எனது வாக்கு. நடை, உடை, ஸ்டைல்  என அனைத்திலும் இளையவர்களை கவர்வதிலே சூர்யாவுக்கு நிகர் எவருமில்லை. அச்சொட்டான நடிப்பும், ஆடம்பரமிலாத்தன்மையும் சூர்யாவிலே எனக்கு பிடித்தவை. எனக்கு விருத்தெரிய தொடங்கியதற்கு பின் வந்த சூர்யாவின் எல்லா படங்களையும் முதல் காட்சியாக ரசித்தவன் என்பதிலே எனக்குள் ஒரு புளுகம்.

"7ம் அறிவு", "ரத்தசரித்திரம்", "சிங்கம்", "ஆதவன்", "அயன்", "வாரணம் ஆயிரம்", "வேல்" எனப்பல எனது மனதிலே நீங்காதவை.
சூர்யாவைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றையும், நண்பர்கள் பகிர்ந்தவற்றையும் தொகுக்கின்றேன் என் நாயகன் சூர்யாவின் பிறந்த நாள் பரிசிற்காக..


நடிகர், எழுத்தாளர் ,ஓவியர் சொற்பொழிவாளர் எனப்பல பரிணாமங்களைப் பெற்ற சிவகுமாருக்கும் , லக்‌ஷ்மி அம்மையாருக்கும் சென்னையிலே 1975 ஜூலை 23ந் திகதி மகனாக பிறந்த சரவணன் தான் இந்த சூர்யா. 
                                                     

சென்னை லோயலாக் கல்லூரியில் வணிகத்துறைப்பட்டம் பெற்ற சரவணன் சினிமாவிற்காக தனது பெயரை ”சூர்யா”வாக்கினான். 
"பூவெல்லாம் கேட்டுப்பார்", முதல் "காக்க காக்க", "சில்லுன்னு ஒரு காதல்", "பேரழகன்" என ஏழு படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த ஜோதிகாவை 11.11.2006 அன்று காதல் திருமணம் புரிந்தார். தியா, தேவ் என இரு குழந்தைகளின் தந்தையானார்.
                                 
வசந்த் இயக்கி மணிரத்னம் தயாரித்த ”நேருக்கு நேர்” என்னும் திரைப்படத்தில் 1997ல் சினிமாவுக்கு அறிமுகமான சூர்யா 24 படங்களில் கதாநாயகனாகவும், ”பிதாமகனில்” விக்ரமுடன் துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 6 படங்களில் அதிதி நடிகனாகவும் அசத்தியிருக்கின்றார்.
                                                                                       
2001ல் பாலாவின் இயக்கத்தில் வந்த “நந்தா” சூர்யாவின் சினிமா வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனை. ஒரு சிறைக்கைதியாகவும்,தாயில் பெரும் பாசங்கொண்டவராகவும் வெகு சிறப்பாக நடித்தார்.
இதற்காக அவ் ஆண்டி(2001)ல் தமிழ் நாட்டின் மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் சுவீகரித்தார்.இதுவே சூர்யாவின் சினிமா வாழ்வின் முதல் விருது.
தவிர 2008ல் வெளி வந்த “வாரணம் ஆயிரம்” சூர்யாவுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது. இப்படத்தில் 16வயது இளைஞனாகவும்,65 வயது வயோதிபராகவும் நடிக்க வேண்டியிருந்தது. உடலை வருத்தி எடையினை குறைத்து மரண விளிம்பிலிருக்கும் ஒரு நோயாளியாக பரிதாபமாக தோன்றி அனைவரையும் அசத்தி இறுதியில் மரணத்தையும் தழுவுகின்றார்.
                                                 

”7ம் அறிவிற்காக” வியட்னாமிலே குங்பூ, கராத்தே ஆகிய கலைகளை பயின்று திரையிலே டொங்லீயுடன் மோதி ஜெயிக்கும் இறுதிக் கிளைமக்ஸ் சுப்பர்.
                                                  
”கஜினி”யும் மாறுபட்ட நடிப்பிற்கு நல்ல பெயரை ஈட்டித்தந்திருக்கின்றது. ”கஜினி” இந்தியில் சல்மான் கானினால் நடிக்கப்பட்டது.
தற்போது ”பிதாமகன்” இந்தியில் திரைப்படமாக்கப்படவுள்ளது.
தற்போது சூர்யாவின் ”மாற்றான்”, ”சிங்கம்-2” என்பன விரைவாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சொந்தமாக ”ஸ்டூடியோ கிறீன்” மூலம் சில திரப்படங்களையும், தம்பி கார்த்தியின் திரைப்படங்களையும் விநயோகித்தார். கார்த்தியின் “சகுனி” ”ஸ்டூடியோ கிறீன்” மூலமே வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
சூர்யா இதுவரை தமிழ்நாட்டரசின் மாநில விருதுகள்-3, பிலிம் பெயார் விருதுகள்-6, விஜய் டீ.வி விருதுகள்-5, சவுத் ஸ்கோப்(ICON) விருது-1, ஸ்டார் ஸ்கிரீன் (ஹிந்தி) விருது-1 , ஸ்டார் டஸ்ட் விருது-1 என மொத்தமாக 17 பிரமாண்டமான விருதுகளினை வென்றுள்ளார்.
                                  




”மாற்றானா”? ”சிங்கம்-2” ? எது முன்பதாக திரைக்கு வருகின்றதோ அதிலே சூரியாவை ரசிக்கும் வரை…..
                                                     


Monday, July 16, 2012

கைப்பொம்மைகள்...


பேசும் ஆற்றலினாலும் பகுத்தறிவு என்னும் பெருஞ் செல்வத்தினாலும் ஏனைய விலங்குகளிடமிருந்து மனிதன் பிரித்தறியப்படுகின்றான். நல்லவற்றை சிந்தித்து செய்தாலும், ஒரு சில சிந்திப்புக்கள் தவறாகி விடுகின்றன. இது மனித மாண்பினை கேள்விக்குரியதாக்கி விடுகின்றது. நல்லவற்றைப் பேசி ,நல்ல விடயங்களை செயற்படுத்திய பலர் எம்மவர்களின் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.
                                     

மனிதனுடைய வாழ்வியலில் ஒவ்வொரு பாகத்திற்கும் குறிப்பிட்ட அளவு முக்கியத்துவமும், பெருமைப்படுத்தலும் வழங்கவேண்டியது தேவையே. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்றனர் எம் முன்னோர்.
மனிதனை பொறுத்தவரையில்செய்யும் தொழில் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பொழுது போக்குகளும் இன்றியமையாதவை.
முன்பெல்லாம் பொழுது போக்குகள் குறைவு.ஆனால் இப்போது அவையெல்லாம் பல்கிப்பெருகி விட்டன.
திரைப்படம் , நாயகன், நாயகி, நகைச்சுவையாளன், இசையமைப்பாளர் அவற்றின் ரசிகர்கள் விருப்பங்கள் வகை தொகையாகின்றன.
திரைப்படங்கள் நல்லதொரு வழிகாட்டலினை, சமூகக் கருத்துக்களை,   வாழ்வியல் அம்சங்களை போத்தித்திருப்பதனையும், போதித்துக்கொண்டிருப்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தோனி, ராம், பிரண்ட்ஸ் எனப்பல திரைக்காவியங்களை வரையறுக்க முடியும். சினிமா சமூகப்பாங்கான வருமானமீட்டும் தொழில் துறையாகவும் மாறியுள்ளது.
ஒரு விடயத்தினை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் நானும் சினிமாவின் ரசிகன். சினிமாவிற்கு எதிரானவன் அல்ல. ஆனால் சினிமாவில் நடக்கும் ஒருசில மூடத்தனமான விடயங்கள் களையப்படுவதனையே விரும்புகின்றேன்.அவற்றினையும் பட்டியலிடுகின்றேன்.
                                  

காலம் காலமாக திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை யாழ்ப்பாணத் திரைகளிலும் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் எம் வாழ்வியலுக்கு பாடம் சொல்லித்தரும் திரைப் படங்கள் வரவேற்பு பெறுவதில்லை. காரணம் உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. எதுவித அர்த்தமுமில்லாத விடயங்கள் பிரபலமடைவது பற்றி நாங்கள் ஆராய்வதில் அர்த்தமுமில்லை.
                             

அதனை விட தமது நாயகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் கூடுகின்ற (பாமர) ரசிகர்களின் //மன்னிக்க வேண்டும்//  மூடத்தனமான செயல்களிலீடுபடுவது வேதனையினைத் தருகின்றது.
நாயகன் தீக்குளிக்கின்றான் என்று ரசிகர்கள் ஏமார்ந்து தீக்குளித்து உயிரிழப்பதும், நாயகன் காப்பாற்றுவான் என்றெண்ணி தூக்கில் தொங்குவதும் எம்மவர்களை அறிவிலிகளாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறித்த நாயகர்களிற்கு 30அடி, 40அடி கட்டவுட்கள் செய்வதும் அவற்றிற்கு பால் ஊற்றுவதும் தேங்காய் உடைப்பதும் எமக்கு என்ன பலாபலன்களைத் தந்து விடப்போகின்றது?
                                           

அப்படியானால் எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக நாம் நம்பும் இறைவனுக்கும் இந்த மானுடர்களிற்கும் என்ன வித்தியாசம்?
நான் உங்களிடம் விடயம் ஒன்றினைக் கேட்க விரும்புகின்றேன்.
எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக நாம் நம்பும் இறைவனுக்கு நீங்களெல்லாம் பால் ஊற்றியதும், தேங்காய் உடைத்ததும் உண்டா?
                                    

நூற்றுக் கணக்கான லீற்றர் பாலினை கட்டவுட்களிற்கு ஊற்றி என்ன பலன்? 3 மணி நேர மகிழ்விற்காக என்னென்னவை எல்லாம் செய்தீர்கள் என்று உங்களிற்கு அதன் பிற்பாடு புரிகின்றதா?
தேங்காயொன்றின் விலை என்ன? பால் ஒரு லீற்றரின் விலை என்ன? நீங்கள் கட்டவுட்களிற்கும், பாலிற்கும், வெடிகளுக்கும், தேங்காய்க்கும் செலவளித்த மொத்த தொகையினை யாராவது உங்கள் அபிமான நாயகர்கள் யுத்தத்தினால் நிர்க்கதியாகியிருந்த போது வழங்கினார்களா?
சிந்தியுங்கள். நான் சினிமாவை ரசிக்க வேண்டாம் எனவில்லை. அளவோடு உங்கள் உணர்வுகளை பிரசவியுங்கள். அறிவிலித் தனமான வேலைகளை அறவே நிறுத்துங்கள்.
                                    

அதற்காக
கட்டவுட்டிற்கும் நிலத்திற்கு ஊற்றி வீணாக்கிய பாலினை போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கும், வறுமையால் பசியில் வாடுபவர்களுக்கும் கொடுத்து உங்கள் உணர்வுகளினை ஆக்க பூர்வமான வழிகளில் வெளிப்படுத்துங்கள். அது புண்ணியமாகக் கூடும்.  மற்றொரு விடயம் உங்கள் குழந்தை. நீங்கள் பெற்ற குழந்தை பாலுக்காக அழுத போது வராத உணர்வு இப்போது ஏன் பீறிட்டெழுந்தது?  உங்கள் குழந்தை பாலுக்காக அழுததை ஏன் மறந்தீர்கள்?
நீங்கள் ஒரு சில விநாடிக் கூத்திற்காக உடைத்த தேங்காய்களை உணவில்லாது ஏங்குபவர்களிடம் கொடுங்கள். அது அவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகபெரும் உபகாரமாக அமையக்கூடும்.
நாங்கள் காலங்காலமாக வெடியொலிகளை கேட்டு அலுத்து விட்டதே. வெறுப்பேத்தாதீர்கள். அவற்றினை மறக்க விடுங்கள்.
                                       
வரிக்கொரு முறை ஈழம் சம்பந்தப்பட்ட வசனங்கள் போடவிட்டால் திரைப்படம் வெற்றியடையாது என்றுணர்ந்து கதை வசனம் எழுதும் நீங்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்தீர்கள்? 

இவற்றினை விட எங்கள் பிரதேசத்திலே (இலங்கையிலே) வந்து நிகழ்ச்சி செய்ய முடியாது. ஆனால் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து ரசிக்க வேண்டும். அப்படியானால் எம்மவர்கள் ஏமாளிகளாகவே இருப்பதனைத்தான் அவர்களும் விரும்புகின்றார்களா? 
மூடத்தனமான வேலைகள் தொடர்கின்ற போது ஏமாற்றுபவர்களும் தங்களது வித்தைகளை தொடர்வர். அளவோடு ரசியுங்கள், அறிவிலித்தனமான செயல்களைத் தவிருங்கள்…              
                              















Saturday, July 7, 2012

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா??? ”ராம்” எனது பார்வையில்....


அமீரே தயாரித்து இயக்கியிருக்கும் ஒரு திரைப்படம் தான் “ராம். யதார்த்தமாக ஒவ்வொரு நாட்டிலும் என்ன நடக்கின்றது என்பதனை அழகாக சொல்லியிருக்கின்றது ஜீவா நடித்த ராம். இத்திரைப்படம் 2005ல் வெளியாகியிருந்தாலும் அதனை ரசிக்கும் வாய்ப்பு எனக்கு இன்றே கிடைத்தது. பார்த்தவுடனேயே ஒரு பதிவினை எழுத வேண்டும் என என்னைத்தூண்டியது. அந்தளவிற்கு கதையினை கச்சிதமாக நகர்த்திச் செல்கின்றார் இயக்குனர் அமீன்.


 தவிர இசையமைப்பில் யுவன் அசத்தியிருக்கின்றார். ஆராரிராரோ, நிழலினை நிஜமும் பிரிந்திடுமா பாடல்களை மனம் தொடர்ந்தும் கேட்கத்தூண்டுகின்றது.
பாடலினை ரசிக்க இந்த இணைப்பினை அழுத்துங்கள்.....
இப் பாடலை நண்பன் உஷி கேட்டதற்காக தேடி எடுத்திருக்கின்றேன்.எந்த திரைப்படம் என்று தெரியாமல் ரசித்த பாடல்களில் இதுவும் இன்று.

ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண் உறங்கு,என்னோட மடி சாய்ந்து

நிழலினை நிஜமும் பிரிந்திடுமாஉடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

இயக்குனர் மகனே தாயைக் கொல்வதாக காட்டியிருப்பது எந்தளவிற்கு பொருத்தமானது என்பது கேள்விக்குரியதே. தவிர தாய்ப்பாசத்தின் இலக்கணத்தினை எமக்கு சொல்லியிருக்கின்றது.கணவன் ராம் கருவுற்ற காலத்திலேயே கைவிட்டிருந்தாலும் அவனை கவனமாக வளர்ப்பது மனதை வருடுகின்றது. ஆனால் இப்போதய காலத்தில் வயது முதிர்ந்த பெற்றோரை முதியோர் இல்லத்திலே சேர்க்கும் ஈனப்பிறப்புகளிற்கு இது நல்லதொரு அடி.
சரி இனி திரைப்படத்தின் கதை மீது கண்ணோட்டத்தினை செலுத்துவோம்.
மகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகின்றனர்  
காவல்துறையினர். 
தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.  
இதற்கிடையே கொலைகாரனாக கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் 
ராமின் காதலி.

                                            

ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம்
மேலும் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிக்கின்றார். இதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும்
 செய்யப்படுகின்றார்
அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கின்றான். தாயாரின் வயிற்றில் 
குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் 
மயங்கி சரிகின்றார்.

                                                       
இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம்
இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவற்றிற்காக சிறை சென்றதற்காகவும்,
 தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை 
செய்யத்தூண்டப்படுகின்றான்.
                                         
இவ்வாறு நகர்கின்றது திரைப்படம்.
ராமின் தாயினை தன் சகோதரன் தான் கொன்றான் என்பதனை தெரிந்து கொண்ட ராமின் காதலி சகோதர பாசத்தினை தாண்டித் தட்டிக்கேட்கின்றார். தவிர தந்தை, தனயன் என்று கூடப்பார்க்காமல் சத்தியத்தினை நிலை நாட்ட முயல்கின்றார். இவை இப்போதயவர்களிடம் காண முடியுமா என்பது வியப்பிற்குரியதே.
யுவனின் இசையில் பாடல்கள் பிரமாதம்.இடையிடையே வரும் இசையும் படத்தின் பால் ஒன்றிக்க வைக்கின்றது. அத்தோடு கஸாலா, ரஹ்மான், முரளி, சரண்யா, சக்தி, பிரதாப் பொத்தன் ஆகியோரும் கதையோடு ஒட்டிப்போகின்றனர்.

                                         
 
அறிமுகப்படத்திலேயே கஞ்சா கருப்பு அச்த்தியிருக்கின்றார். ஆனால் மனைவியைக் கண்டு அஞ்சுவதும், வேறு ஒருவனுக்கு அடிப்பது என நினைத்து கட்டிய மனைவியை அடிப்பதும், அடித்த பின்பு தடுமாறுவதிலும்  பரிதாபம் தென்படுகின்றது.
                                     
தவிர இரண்டு விருதுகளும் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருப்பது சிரப்பம்சமாகும்.2006ம் ஆண்டு CIFFன்  சிறந்த நடிகரிற்கான விருது ஜீவாவிற்கு சேர்ந்திருக்கின்றது. குறித்த ஆண்டின் CIFFன்  சிறந்த இசையமைப்பிற்கான விருது ”ராம்”ற்கு இசையமைத்தமைகாக யுவனிற்கு கிடைத்திருக்கின்றது.  




சரியாக முடிவெடுத்தலையும், வீண்பழி சுமத்துவதனையும் பற்றி  சட்டப்படி சொல்லியிருக்கும் ராம் மொத்தத்தில் நல்ல பல விடயங்களை பலரிற்கு தந்திருக்கின்றது.

பிரபல்யமான பதிவுகள்