Thursday, May 17, 2012

JPL ஒரு பார்வை...



இனிமையான வரலாறுகளுடன் ஆரம்பித்தது தான் இந்த கிரிக்கட்.பல்வேறு தடவைகள் விதி முறைகளை மாற்றி மாற்றி உன்னதமாக உலக மக்களை கவர்ந்த விளையாட்டாக பரிணாமம் பெற்றிருக்கின்றது கிறிக்கட்.கிறிக்கட் விளையாட்டு இந்தளவு செல்வாக்கு பெற்று விளங்குவதற்கு பலர் அதன் பின் புலத்திலிருந்து மிகக் கடுமையாக உழைத்திருக்கின்றனர்.
முன்னதாக ஒருநாள் போட்டிகளெல்லாம் கிடையாது.போட்டிகள் சில நாட்கள் தொடர்ச்சியாக விளையாடப்பட்டன. முடிவுகள் கிடைப்பதெல்லாம் அரிது.
சுவாரஸ்யம் கொஞ்சம் குறையவே ஒரு நாள் போட்டிகள் அறிமுகமாகின.இவ்வாறு பரிணாமம் பெற்று மட்டுப் படுத்திய பந்து பரிமாற்றங்கள் கொண்ட போட்டிகள் அறிமுகமாயின.சூடு சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லாமல்போட்டிகள் நடக்கலாயின.எனினும் காலவோட்டத்தோடு மனிதர்களும் மாறத் தொடங்கினர். நவீன மயமாக்கலினால் மிகப்பரபரப்பு மிக்க இயந்திரங்களாக மனிதர்கள் மாறத் தொடங்கினர்.அதன் விளைவாகவும், கிறிக்கற்றின் சுவாரஸ்யத்தினை அதிகரிக்கும் விதமாகவும் ஆரம்பமாகியதே இவ் T-20 போட்டிகள்.


குறுகிய நேரத்தில் முடிவுகள் கிடைப்பதாலும் அதிரடிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு குறைவில்லாததாலும் மனிதனை தன் கட்டுக்குள் கொண்டு வந்தன இவ் T-20 கிறிக்கற் போட்டிகள்.20 பந்து பரிமாற்றங்கள் கொண்ட போட்டிகள் சர்வதேச கிறிக்கட் சபையால் ஆரம்பிக்கப்பட்டு ICL (Indian Cricket League) க பரிமாணம் பெற்றது.தவிர்க்க முடியாத காரணங்களால் ICL வரலாறாக கழுவப்பட்டது.
அதன் பின் ஆரம்பமாகியதே IPL (Indian Premier League). இதுவே வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும்,அவர்களின் திறமைக்கு களம் அமைக்கவும், செல்வம் கொழிக்கவும் வழி கோலின.படிப்படியாக பல நாடுகளிற்கு பரம்பலடைந்தாலும் அங்கெல்லாம் பிரபலமடைவது கொஞ்சம் தாமதமாகின.











இதன் ஒரு படியாகவே எம்மவர்களின் திறமைகளிற்கு களம் அமைக்கும் விதமாக JPL (JaffnaPremier League) என்னும் ஒரு கிறிக்கட் கொண்டட்டத்திற்கு யாழ்ப்பாணம் தயாராகி வருகின்றது.இது மகிழ்விற்குரியதும் பாரட்டத்தக்கதுமான ஒரு விடயம் என்றால் மறுப்பேதுமில்லை.எம்மவர்கள் தங்களது நிலைகளை சர்வதேச தரத்திற்கு நகர்த்துவதற்கு இதுவே தக்க தருணம். இதனை ஏற்பாடு செய்து நடாத்தும் UR FRIEND FOUNDATION (URFF) நிறுவனத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.
வர்ண ஆடைகள்,வெள்ளைப்பந்து ஊடக அனுசரணைகள் என யாழ் மண்ணிற்கு மிகப் பெரும் மாற்றம் மிக்க வரப்பிரசாதமாகும்.காலத்தின் கோலத்தால் பின்நோக்கிச் சென்று விட்டோம் என்று அல்லலுறும் சிலருக்கு இது நிம்மதியை தரக் கூடும்.
தவிர யாழ் மண்ணிற்கு முற்று முழுதாக புதிதாக அமைகின்ற இவ் நிகழ்வின் வெற்றி எம்மவர்களின் கரங்களிலே தங்கியிருக்கின்றது.
யாழ் மாவட்ட கிறிக்கட் சங்கத்திலே பதிவு செய்துள்ள மாவட்ட தர வரிசையில் முதல் 8 இடங்களிலுள்ள அணிகள் URFF(UR Friend Foundation) வெற்றிக் கிண்ணத்திற்காக இம் மாதம் 27ம் திகதி முதல் (மே மாதம்) ஜூன் மாதம் 24ம் திகதி வரை யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் களம் காண்கின்றன.
ஏனைய பதிவு பெற்ற கழகங்கள் எதிர்வரும் காலங்களிலே இச் சுற்றுப் போட்டிக்குள் உள்வாங்கப்பட காத்திருக்கின்றன.



ஊடக அனுசரணையினை இதயத்தின் நாதம் ”வெற்றி fm” ம், அச்சு ஊடக அனுசரணையினை தமிழ் பேசும் மக்களின் தனித்துவக் குரல் ”தினக்குரல்” ம் வழங்குகின்றன.
வெள்ளைப் பந்து,வர்ணச் சீருடைகள் எம்மவர்களிற்கு புதிதாக இருந்தாலும் எதனையும் புதுத் தன்மையோடு எதிர் கொள்வதற்கு யாழ்ப்பாணத்தவரிற்கு நிகராக எவரும் இல்லை என்பது சிறப்பு எனலாம். தவிர பல ஆண்டுகள் வரலாற்றினை கொண்ட யாழ்ப்பாணத்திலே வடக்கின் போர், இந்துக்களின் போர்,பொன் அணிகளின் போர்,வீரர்களின் போர் வரிசையில் JPL (JaffnaPremier League)ம் அமைய வேண்டுமென்பதே அனைவரதும் பேரவா.
நடைபெறவிருக்கின்ற JPL-1  (JaffnaPremier League)ற்கு யாழ் மக்கள் அனைவரும் குறிப்பாக கிறிக்கட் ரசிகர்கள் தமது பூரண ஆதரவினை வழங்கி போட்டியினை மிகப்பெரும் பணத்தொகையில் ஏற்பாடு செய்திருக்கும் ஏர்பாட்டாளர்களிற்கு வெற்றியினைப் பெற்றுக் கொடுத்து எம்மவர்களின் திறமைகளிற்கு களம் அமைக்க வேண்டியது காலத்தின் தேவையே………

No comments:

Post a Comment

பிரபல்யமான பதிவுகள்