
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கி அனுப்பப்படும் பாலா (மம்முட்டி) அங்கு நடக்கும் போரில் ஊனப்படுத்தப்படுகின்றார். பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காக போர் செய்தவர்களை(பாலா உட்பட்ட அனைவரையும்) முற்றிலும் மறந்து விட்டது என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.
பின்னர் மீனாட்சியைக் விரும்புகின்றார் ஆனால் செயற்கைக் கால்கள் பொருத்திய பாலாவை மீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாட்சியோ சிறீகாந்தைத் (அப்பாஸ்) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் (அஜித்) சௌம்யாவிற்கும் (தபு) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.
ராஜிவ் மேனனின் இயக்கம் தனி; தயாரிப்பிலே கலைப்புலி எஸ்.தாணு ஏ.எம்.ரத்னம்
தங்களை மீண்ணும் உச்சத்திலே நிறுத்தியிருக்கின்றனர். ரஹ்மான் இசை சொல்லவே தேவையில்லை.
பாடல்கள் நெஞ்சத்தை
வருடுகின்றன. பழசு பழசு என்று தூக்கி எறிவதை விட்டு அதனுள் இருக்கும் பொக்கிஷங்களை
காணத் தயாராவோம்…
No comments:
Post a Comment