Friday, September 7, 2012

புற்தரை(TURF)யில் களமாடும் இந்து...வாழ்த்துக்கள்+எதிர்பார்ப்பு


வடக்கு தெற்கு நட்புறவை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு.ஆனந்தாக் கல்லூரி அணிகளிற்கிடையிலான நட்புறவுக் கிறிக்கட் போட்டி  ஆனந்தாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

                                

30 வருடமாக வடக்கிற்கும் தெற்கிற்குமான முறுகலை அகற்றி இன நல்லிணக்கம், நட்புறவு நோக்கி இப் போட்டி எம்மவர்களை நகர்த்திச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

இப்போட்டிகள் ஏனைய கல்லூரிகளிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது. அவர்களும் இது போன்ற போட்டிகளினை ஏற்பாடு செய்வதன் மூலம் தமது வீரர்களின் திறமைகளையும், உறவுகளையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட இரு பாடசாலைகளும் இம்மாதம்  7ம், 8ம்  களம் காண்கின்றன. இரு அணிகளும் மிகப் பலம் மிக்கவை என்பதால் போட்டியில் சூடு சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது என்பது கிறிக்கட் ரசிகர்களது கருத்து.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கிருஷோபன் தலைமையிலும், ஆனந்தக் கல்லூரி துஷார சமரக்கூன் தலைமையிலும் களமாடுகின்றது.

இந்துவின் அணி வீரர்கள்+திறமைகளுடன்

புற்தரை ஆடுகளங்கள் (TURF) எம்மவர்களுக்கு புதிது என்பதால்  ஆனந்தக் கல்லூரியினருக்கு அது சாதகமாக அமையலாம். எனினும் திறமைகள் அடிப்படையில் எமது வீரர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

இந்துக்கல்லூரியில் பாடசாலைக் கல்வியினைக் கற்று 20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு.ஆனந்தாக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக அரும்பணியாற்றி, தலைமை ஆசிரியர் பதவிக்கு வந்த திரு.வீ.டீ.எஸ்.சிவகுருநாதன் அவர்களினை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான போட்டிகள் இடம்பெறவுள்ளன. திரு.வீ.டீ.எஸ்.குருநாதன் பெயரில் இந்தத்தொடர் இடம்பெறுவது எமக்கும் பெருமையே.

இந்துவின் குழாம்
கடந்த ஒருசில வருடங்களிற்கு முன் இப் போட்டி ஏற்பாடுகள் இடம் பெற்றாலும் இப்போது தான் அது முற்றுப் பெற்றிருக்கின்றது. இடையிடையே ஏற்பட்ட தடங்கல்களும்,தவிர்க்க முடியாத காரணங்களும் போட்டியின் அரம்பத்தினை  2012 செப்டெம்பர் வரை தள்ளிப் போட்டிருக்கின்றன. இதற்கு கடுமையாக உழைத்த இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர் சங்கங்களிற்கு முதலிலே வாழ்த்துக்கள்.

இம் மாதம் 7ம்,மற்றும் 8ம் திகதிகளில் இடம்பெறவுள்ள இப்போட்டியின் ஆரம்ப நிகழ்விலே விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சர் பேராசிரியர். திஸ்ஸ விதாரண, ஆனந்தாக் கல்லூரி உருவாக்கித் தந்திருக்கும் தேசியக் கிறிக்கட் வீரர்கள், இலங்கை அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன, 1996 உலக கிண்ணத்தை இலங்கைக்கு வென்று தந்த அர்ஜூன ரணதுங்க உட்பட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


ஆனந்தக் கல்லூரியினர் 
 எம்மண்ணின் வீரர்களின் திறமைகளை வெளியுலகம் அறியவும், வீரர்களின் திறமைகள் அதிகரிக்கவும் இப் போட்டித்தொடர்கள் உதவும் என எதிர்பார்க்கலாம்.

2 comments:

  1. கேள்விப்பட்டேன் சகோ...இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள்...ஆனந்தாக்கு சாதகமான வாய்ப்புகள் அதிகம் போல தெரிகிறது..பார்க்கலாம்.

    ReplyDelete
  2. இந்துவின் மைந்தர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல:) இது காலம் தந்த பாடம். பொறுத்திருந்து பார்ப்போம்:)

    ReplyDelete

பிரபல்யமான பதிவுகள்