இன்றைய தினம் T-20 உலக கிண்ணத்தினைப் பொறுத்தவரை முற்று முழுதாக எதிர்பார்க்கப் பட்ட போட்டிகள்
ஆரம்பமாயிருக்கின்றன. அதிர்ஷ்டமில்லாத, பலவீனமான அணிகள் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதால்
தத்தமது குழுக்களில் முதலிடத்தைப் பெற்று அடுத்தகட்ட போட்டிகளை இலகுவாக்கவே இவை வழி
சமைக்கும் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க யாழ் குடாநாட்டினைப்
பொறுத்தவரை இன்றும் நாளையும் மின்தடை. ஒரு சில முக்கிய நிகழ்வுகள் காரணமாக போட்டியினை
நேரடியாக பார்க்கவும் முடியவில்லை, என்ன செய்வது, எனக்குப் பிடித்த இலங்கை அணி களமாடுவதால்
போட்டியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. மினுற்பத்தியாக்கியை (JENARATOR) ஒரு மாதிரி
தேடிப் பிடித்து, அப்பப்பா அலுத்தே விட்டது….
சரி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று போட்டியின்
அலைவரிசையினை நகர்த்தினால் மழை காரணமாக போட்டி இன்னும் ஆரம்பமாகவில்லை என் உணர முடிந்தது.
சரி, எல்லா ஏற்ஆடுகளையும் முடித்தாயிற்று, இன்னும் போட்டி ஆரம்பமாகவில்லையே என்னும்
பேராதங்கம்…..
5.15போல கைத்தொ(ல்)லைபேசியில் பார்த்த போது போட்டியானது
7 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்டதாக 6மணிக்கு ஆரம்பமாகுமாம் என்றது. சரி, ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலியே என்ற மாதிரி போட்டியை காணும் ஆவல் வலுப்பெற்றது.
நாணயற்சுழற்சி, இலங்கை வென்று முதலில் களத்தடுப்பாட்டத்தை
தேர்வு செய்தது. இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டும்.
போட்டி ஆரம்பம் தாமதம், பந்துப் பரிமாற்றங்கள் குறைவு
அப்போ முதலில் துடுப்பெடுத்தாடினாலே சாதகமாக அமையும் என்பது யதார்தம். இதை தாண்டி களத்தடுப்பாட்டத்தை
தேர்வு செய்தமை கடவுளுக்கும் ஜெயவர்தனவுக்கும் தான் வெளிச்சம்.
ஆரம்ப ஓவர்களில் தென்னாபிரிக்காவினை கட்டுப் படுத்தி
தான் வைத்திருந்தார்கள். மலிங்கவின் முதலாவது ஓவர் போட்டு வாங்கப்பட்டது, அதற்கப்புறமாக
ஏன் தனது இரண்டாவது ஓவரையும் வீச மலிங்க அழைக்கப்பட்டார்?
தவிர கடந்த போட்டியில் சாதனையுடன் சுழலில் அசத்திய
அஜந்த மெண்டிஸ் ஏன் நீக்கப் பட்டார்.
போட்டியில் சிலரது பந்துகள் அடித்து நொறுக்கப் பட்ட
போது பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் ஏன் உபயோகிக்கப்
படவில்லை?
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குழுவிலே முதலிடத்தை
பெற முடியும் , ஆதலால் தொடரும் போட்டிகளை இலகுவாக கடக்க முடியும் என்பது ஜெயவர்தன அறியாததா?
தென்னாபிரிக்காவால் ஒற்றை ஒட்டங்களை (SINGLE) விட
இரட்டை ஓட்டங்களும், நான்குகளும், ஆறுகளுமே மாறி மாறி குவிக்கப்பட்டது.
டீ வில்லியர்ஸ் அதிரடியாக 15 பந்துகளில் 30 ஓட்டங்களப்
பெற்றமை 7 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியின் போக்கினை முற்று முழுதாக தென்னாபிரிக்கப்
பக்கம் மாற்றியிருந்தது.
எனவே பந்து வீசாளர்களின் பலம் மிகக் கேள்விக்கு
உரியதாகியிருக்கின்றது?
78 என்னும் ஓட்ட இலக்கு T-20ஐ பொறுத்தவரை பெரியதொரு இலக்கு அல்ல. டில்ஷான், ஜெயவர்தன, பெரேரா, சங்கா
,மத்யூஸ் கொண்ட பெரும் துடுப்பாட்ட படைக்கு இலகுவானதொரு இலக்காக இலங்கை துடுப்பெடுத்தாடும்
வரை 78 ஓட்டங்கள் இருந்தன.
ஆனால் ஆரம்பமே அதிர்ச்சி. டில்ஷான் எந்தப் பந்துகளையும்
எதிர்கொள்ளாமலே ஜெயவர்தனவால் வெளியேற்றப்பட்டார்.
டில்ஷானை அனுப்பிய பின்பு அந்தப்
பொறுப்பையும் உணர்ந்து ஜெயவர்தன துடுப்பெடுத்தாடாதது ஏமாற்றமே.
3ம் இலக்கத்தில் பெரேரா எதிர்பார்க்கப் பட்ட போதும்
படபடப்பான நேரத்தில் T-20க்கு புதியவரான முனவீர களமிறக்கப் பட்டதன்
விளைவு தான் என்னவோ? அவர் போட்டியில் எடுத்த பயிற்சிகளை வீட்டிலிருந்தே எடுத்திருக்கலாம்.
சங்கா கூட அந்தளவிற்கு பொறுப்புணர்ந்து துடுப்பெடுத்தடவில்லை.
தனியே ஸிம்பாவெயை மட்டும் ஜெயித்தால் போதாது, இன்னும்
பலமாக வளர வேண்டியது காலத்தின் தேவை. பந்து வீச்சு,துடுப்பாட்டம், களத்தடுப்பு இன்னும்
வளர வேண்டும், இல்லா விட்டால் இன்னொரு 1996ஐ இலங்கையில் காண இன்னும் 20 வருடங்கள் எடுக்கலாம்.
அடுத்த
போட்டி, அவுஸ்ரேலியாவுக்கு அசத்திக் காட்டினார் கிறிஸ்கெயில்ஸ்,
நேற்றைய பிறந்த நாள் விருந்தை இன்று அவர் ரசிகர்களுக்கு
படைத்திருக்கின்றார் என எதிர்பார்க்கலாம்.
என்னதான் இருந்தாலும் டக்வேர்த் லூயிஸ் முறையில்
17 ஓட்டங்களால் கங்காருக்கள் வென்றிருக்கின்றன.
மழை போட்டிகள வெகுவாக பாதிக்கின்றது. இலங்கை அணியின்
தோல்வியைக் கண்டு வருணபகவான் அழுதுவிட்டார் போலும்……..
இன்னும் கலகலப்பான போட்டிகள் இனித்தான், காத்திருப்போம்…
No comments:
Post a Comment