உலகக் கிண்ணம் ஆரம்பித்து மிகக் கோலாகலமாக இடம்பெற்று
வருகின்றது. பல அணிகள் தங்களை இனம் காட்டியிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் ஓரளவாயினும்
நிறைவேறியிருக்கின்றன. எதிர்பார்க்கப்படுகின்ற போட்டிகள் தொடர்ந்து வரும்
நாட்களில் நடைபெறவிருப்பதால் விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை.
ரசிகர்கள் மோதியடித்து ஆர்வமாக போட்டிகளை ரசிக்கின்றனர். ஆகவே வருவாய் மிகப் போதுமானதாக அமையும். வீரர்களுக்கான அதரவும் மிக வலிமையானதாக இருக்கின்றது. இவை இலங்கையிலும் கிறிக்கட் உயிரோட்டமாக இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

நிறைவடைந்த போட்டிகளிலே எதிர்பார்த்த படி இலங்கை சிம்பாவேயை வீழ்த்தியிருக்கின்றது. இதனை எல்லோரும் எதிர்பார்த்திருந்தாலும் மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் தன்னை நிரூபித்திருக்கின்றார். பல மாதங்களாக அணியிலிருந்து தூக்கப் பட்ட்தால் ஓய்விலும், உடற்தகுதியை நிரூபிக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்த மெண்டிஸுன் அயராத உழைப்பிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
அன்றைய இலங்கை சிம்பாவே போட்டி முற்று முழுதாக மெண்டிஸ்களின்
போட்டியாகவே மாறியிருந்தது. துடுப்பாட்டத்தில் ஜீவன்மெண்டிஸ் அசத்த பந்துவீச்சில்
அஜந்தமெண்டிஸ் தன் கைவரிசையினைக் காட்டியிருக்கின்றார்.
தவிர சங்காவும் வழங்கப்பட்ட 3விருதுகளுக்கும் தான்
தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கின்றார். மலிங்க இன்னும் ஃபோர்முக்கு வந்ததாக
தெரியவில்லை. அன்றைய நாளிலே மலிங்கவின் அனைத்து பந்துகளும் அடித்து
நொறுக்கப்பட்டிருந்தன. இலங்கையின் பந்து வீச்சு இன்னும் பலமானதாக மாற்றியமைக்கப்
பட வேண்டியிருக்கின்றது. அப்படியாக மாற்றப்படும் போதே இன்னோரு 1996 பற்றி நாம் கனவு
காண முடியும்.
இந்தியா உண்மையிலே
அன்று கலங்கியிருப்பர். பங்களாதேஷ் அல்லது ஸிம்பாவே போன்ற சின்ன அணிகள் தான்
அசத்தும் என எதிர்பார்த்த அனைவரிற்கும் பேரதிர்ச்சி. ஆப்கானிஸ்தான் உரிமைகளுக்காக
போராடுவது போன்றே கிறிக்கட்டிலும் தங்கள் நிலைகளை ஸ்திரப்படுத்தப் போராடுகின்றமை
தெளிவாகத் தெரிகின்றது.
பந்து வீச்சு துடுப்பாட்டம் இரண்டிலும் ஒரளவு திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும் இன்னும் அவர்கள் வளர வேண்டியிருக்கின்றது. களத்தடுப்பு மிக மோசம். பல இலகுவான பிடிகள் மைதானத்தில் நழுவ விட்டிருந்தனர். இவை கூட போட்டியினை இழக்கப் பண்ணியிருக்கலாம். திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமாக இருக்கின்றனர். வாழ்த்துக்கள், எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் நிறைவேற்றியமைக்காக. வளருங்கள், வானமே உங்கள் எல்லை.

ஸிம்பாவே மிக எதிர்பார்க்கப் பட்ட அணி.
முதலாவதாக தொடரிலிருந்து சோகத்தோடு விடைபெறுகின்றது. திறமைகள் இருந்தால் மட்டும்
போதாது. அதிர்ஸ்டமும் தேவை என்பதற்கு சான்றாகியிருக்கின்றனர். அவர்களின்
கூட்டுமுயற்சி,அணி ஒற்றுமைகள் கூட அண்மை காலங்களிலே கேள்விக்குரியதாய்
மாறியிருக்கின்றது. அசத்த வேண்டுமெனில் ஒற்றுமையும் தேவை. தொடர்ந்து திறமைகளை
எதிர்பார்க்கின்றோம்.
தென்னாபிரிக்கா, சொல்ல வேண்டியதேயில்லை.
அதிரடி வீரர்கள், அசத்தும் பந்துவீச்சாளர்களை வைத்து கிண்ணத்தை வெல்லுவார்களா என்பதை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா, ரசிகர்கள் தான் அவர்களின்
பலமும்,பலவீனமும். அன்றைய போட்டியின் போது கூட கங்குலியின் படங்கள் எரிக்கப் பட்ட
நிலை டோனிக்கும் வருமோ என்று எண்ணும் அளவுக்கு ஆப்கானிஸ்தானின் திறமை பாராட்டபட வேண்டும்.
தவிர ஹோஹ்லி வாயால் அடிப்பதை விடுத்து
இன்னும் சிறப்பாக துடுப்பால் அசத்தலாமே? சதங்கள், அரைச்சதங்கள், ஆறு ஓட்டங்களைப்
பெறுகின்ற போது ஹோலியின் வாயால் வருகின்ற வார்த்தைகள், இவரும் காந்திபிறந்த
மண்ணின் மைந்தனா என வினாவெழுப்ப வைக்கின்றது.
அவுஸ்ரேலியா தரவரிசையில் கடைசியாக இருந்தாலும் அயர்லாந்தின் மீது தங்கள் திறமைகளைத் திணித்திருக்கின்றனர்.
கிறிக்கட்டின் முடிவுகளினை ஊகிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது.
கிறிக்கட்டின் முடிவுகளினை ஊகிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது.
இந்த 2012ம் ஆண்டின் உலக கிண்ணப்
போட்டிகளை நழுவ விட்டோமாக இருந்தால் அடுத்த உலக கிண்ண போட்டியொன்றினை இன்னும் 20வருடங்களின்
பிற்பாடே இலங்கையில் காணமுடியுமாம் பாருங்கோJ
நான் வெளிக்கட்டன், மூட்டை முடிச்சுகளோடு,
உலக்கிண்ண போட்டிகளுக்காக, நீங்கள் என்ன மாதிரி?
ஆர்வத்தோடு, நிதானமாக காத்திருக்கின்றோம், கிண்ணம் வெல்லும் கனவோடு......
ஆர்வத்தோடு, நிதானமாக காத்திருக்கின்றோம், கிண்ணம் வெல்லும் கனவோடு......
good one :)
ReplyDelete