இருக்கிற நேரத்தையெல்லாம் மிச்சப் படுத்தி T-20 கிறிக்கட் போட்டி சம்பந்தமான ஒரு பதிவை இடுகின்றேன். அடுத்தடுத்த பதிவுகளில் முழுமையான தகவல்களையும் இடுகையிடக் காத்திருக்கின்றேன்.
19 நாட்கள் ஓயாதகொண்டாட்டம்,
விளம்பரதாரர்கள், ஒளிபரப்பும் உரிமை என பல விடயங்கள்,
எல்லா போட்டிகளுக்குமான டிக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன,(அரையிறுதி,இறுதி உட்பட), யார் அசத்துவார்கள் என்னும் எதிர்பார்ப்பு..
அதிரடிகளுக்கு பஞ்சமில்லாது ரசிகர்களின் வேட்கைக்கு தீனி போடப்போகும் T-20 கிறிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. பலர் தங்கள் தங்கள் ஊகங்களை எல்லாம் வெளிப்படுத்தி தங்களது அணிக்கான ஆதரவுகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். இவையெல்லாவற்றினையும் தாண்டி இவ் உலக கிண்ண T-20 போட்டிகள் இலங்கையில் நடைபெறுவது எல்லோருடைய வரப் பிரசாதமுமே.
அது மட்டுமில்லாது 2012 ல்உலகம் அழியப் போகின்றதாம் என்னவோ, ஏதோ மேல போறதுக்கு முன்னால ஒரு உலக கிண்ணத் தொடரின் போட்டிகளைப் பார்த்து விடும் அலாதியா ஆர்வமும் என்னைப் பொறுத்தவரை இல்லாமல் இல்லை.
ஒரு மாதிரி ஒடியாடி இறுதிப் போட்டிக்கான டிக்கற்றுகளை வாங்கி முடித்தாயிற்று. தவிர முக்கியமான அதுவும் இலங்கை அணி பங்கு கொள்ளும் போட்டிகளின் ஒரு சில போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளும் கைவசம் இருக்கின்றன. இலங்கை அணிக்கான ஆதரவுக்காக அச்சிடப் பட்ட டீ-ஷேர்ட் டும் என் வசம் கிடைத்து விட்டது.
இவற்றினை விட T-20 கிறிக்கட் போட்டிகளைக் கொண்டாட வேறென்ன வேண்டும்.
இவ்வாண்டின் 2012ன் T-20 கிறிக்கட் போட்டியில் பங்கு கொள்ளும் அணிகள் சம்பந்தமான தனித் தனியான பார்வைக்கு இவ் இணைப்பினூடு செல்லுங்கள்.
இதற்கப்புறம் சொல்லுங்கள் யார் வசம் 2012ன் T-20 உலகக் கிண்ணம் என்று...
இலங்கையில் நடைபெறும் போட்டிகள் என்பதால் இலங்கை அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கலாம். தவிர கடந்த வாரம் வழங்கப்பட்ட விருதுகளில் 3 முக்கியமான விருதுகள் இலங்கை அணியின் சங்காவின் பக்கம் இருப்பது எம்மணிக்குப் பலமே. இவற்றையெல்லாம் விட மலிங்கவின் பந்து வீச்சு முக்கியமாக பேசப்படுகின்றது. மத்யூஸின் கலக்கலானதும் பொறுப்பானதுமான ஆட்டம் எதிர்பார்க்கப் படுகின்றது. மெண்டிஸ் சுழலில் மீண்டும் யார் யார் சிக்கப் போகின்றனரோ தெரியாது. ஆரம்ப துடுப்பாட்டத்தில் மஹேல+டில்ஷான் ஜோடியை எதிர்பார்க்கலாம்.
இலங்கைக்கு அடுத்த படியாக அதிகம் பேசப்படுவது இந்தியாவும், மேற்கிந்தியாவுமே தான்.
யுவராஜ் அணிக்கு திரும்பியிருப்பது, தொடர்ச்சியாக அசத்தி வரும் ஹோலி, டோனியின் அதிரடிகள், அணியின் ஒற்றுமையும் ,சிறப்பான களத்தடுப்பும் அவர்கள் மீதான எதிர்பார்ப்பிற்கு காரணமாயிருக்கின்றது.
மேற்கிந்தியாவைப் பொறுத்த வரை நரேய்னுடைய பந்து வீச்சினை இலகுவில் கணித்து துடுப்பெடுத்தாட எல்லோரும் சிரமப்பட்டதனை IPLல் காண முடிந்தது.
கிரான் பொலார்ட், கெய்ல், வேணாமப்பா வேணாம் என்று சொல்லுமளவிற்கு நொருக்கி எடுத்தவர் தான் இந்தக் கெய்ல், எந்த வீரருக்கும் இல்லாத தனிச்சிறப்பு கெய்ல் பக்கம், அடிக்க தொடங்கினால் அடித்து நொறுக்குவதை யாராலும் நிறுத்த முடியாததே. தவிர சிறப்பாக வளர்ந்திருக்கின்றனர்.
இவற்றினை விட சின்ன அணிகளும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காத்திருக்கின்றன. தென்னாபிரிக்கவையும், பங்களாதேஷையும் சுருட்டிப் போட்ட சிம்பாவே சாத்திதாலும் சாதிக்கலாம். ஏனைய சின்னச் சின்ன அணிகளும் மிகப்பெரிய அணிகளுக்கு சிம்ம சொர்ப்பனமாகலாம்.
1996ற்குப் பின் எந்த உலக கிண்ணத்தினையும் இலங்கை கைப்பற்றவில்லையே என்று ஆதங்கப் படும் என்னைப் போல் பலருக்கு இலங்கை அணி என செய்யப் போகின்றது?
மாலை 7.30 மணி முதல் 19 நாட்களும் கொண்டாட்டமாகப் போகின்றன,இலங்கை அணி வெல்லும் பட்சத்திலே......
yes....we r srilankans:)
ReplyDeletegood luck ushanth#
yes,yes thankyou loshan anna & kuma ran:)
ReplyDeletegood da
ReplyDelete