சூடு சுவாரஸ்யங்களுக்கு முற்றும்
குறைவில்லாது நடக்கும் என எதிர்பார்க்கப் பட்ட T-20 கிறிக்கட் தொடர் இறுதிக் கட்டத்தினை
எட்டியிருக்கின்றது. எதிர்பார்க்கப் பட்ட வீரர்கள், அணிகள் பெரும்பாலாக சாதித்திருந்தாலும்
ஒருசில சறுக்கல்கள் இல்லாமலும் இல்லை.
அரையிறுதிப் போட்டிகள், இறுதிப்
போட்டி மட்டுமே இன்னும் எஞ்சி இருப்பதால் அவை பற்றிய அலசல் போதுமானது. எதிர்பார்த்த
படியே இலங்கை, மேற்கிந்தியா மேலெழுந்து வந்துள்ளது. அடுத்தபடியாக பாக்கிஸ்தான், அவுஸ்ரேலியா
கூட தத்தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை, தென்னாபிரிக்காவுடன்
பெற்ற தோல்வியைத் தவிர இத் தொடரில் வேறொரு அணியிடமும் போட்டியை இழக்கவில்லை. டில்ஷான்,
ஜெயவர்தன, சங்கக்கார தங்கள் நிலைகளை உணர்ந்து ஆடுகின்றனர். தவிர மத்தியூஸ், திரிமன்னே, திசர பெரேரா துடுப்பாடத்தில்
தங்களையும் ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பந்துவீச்சுத் துறை மெண்டிஸ்+மலிங்கவின் கைகளில். எனினும் இவ்
இரண்டு பேரை மட்டும் நம்பி களமிறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை கடந்த போட்டிகள்
பார்த்தவர்களிற்கு புரிந்திருக்கும்.
தொடர்ச்சியாக பல இறுதிப் போட்டிகளிற்கு இலங்கை வந்திருந்தாலும்
கிண்ணங்களை கைப்பற்றாமலே செல்வது ரசிகர்களை பொறுத்தவரை ஆதங்கமானதே. அந்தக் குறையையும்
1996 ற்குப்பின் எந்த உலக கிண்ணத்தையும் வெல்லாத குறையையும் இலங்கை நிறைவேற்றுமா என்பதை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதல் தடவையாக ஒரு உலக T20 கிண்ணத் தொடரை நடத்தும் அணி அரை இறுதிக்குத் தெரிவாகி இருக்கிறது. இது கூட சொந்தமண்ணில் விளையாடும் இலங்கைக்கு சாதகங்களைத்
தரக்கூடும்.
பாகிஸ்தான் தனது தொடர்ச்சியான நான்காவது உலக T20 கிண்ண அரையிறுதிக்குத் தெரிவாகியிருக்கின்றது. துடுப்பாட வரிசை, பந்துவீச்சு, அசத்தலான களத்தடுப்பு
அவர்களை மேலே கொண்டுவந்திருக்கின்றது. சஜீட்அஜ்மல் தொடர்ந்தும் அணிக்கு கைகொடுத்து
வருகின்றார். மொஹமட் ஹாஃபீஸ் கூட சொல்லும் படியாக செயற்படுகின்றார். எந்த நேரத்திலும்
வெடிக்கக் கூடிய பெரும் புயல் அப்ரிடி அவர்களின் பலம். இன்னொரு 2009 நோக்கி அவர்கள்
பயணிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஒட்டுமொத்த அணியின் ஒற்றுமை அவர்களுக்கு
மேலும் வெற்றிகளை பெற்றுத் தராலம்.
மேற்கிந்தியா,உண்மையிலே அனைவராலும் எதிர்பார்கப்பட்டதைப் போன்று செய்தும் காட்டியிருக்கின்றனர். கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் இணைந்து அடிக்கும் அடிகள் எதிரணிகளை ஆட்டம் காண வைக்கின்றன. கெய்லின் நடனம் கூட அனைவரையும் அசத்துகின்றது. ஒட்டு மொத்த அணியும் கிண்ணத்திற்காகவும், சாதிக்க வேண்டும் என்னும் வெறியோடும் விளையாடுவது புலப்படுகின்றது. டரன் சமி கூட அணியை கட்டுக்கோப்பாக வெற்றிக் கிண்ணம் நோக்கி அழைத்துச் செல்கின்றார். என்ன தான் நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அவுஸ்ரேலியா,ஒருகாலத்தின்
கிறிக்கட்டின் ஜாம்பவான்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள். இடைவெளிகள், சிரேஷ்ட வீரர்களின்
ஓய்வால் ஸ்திரமாக தொடரமுடியாது தட்டுத்தடுமாறி நிமிர்ந்திருக்கின்றனர். வட்ஷன், ஹசி,
மிச்சல் ஸ்ராக் அபாரமாக செயற்படுகின்றனர். மீண்டும் ஏனைய அணிகளை
அச்சுறுத்தும் அணியாக தங்களை பலப்படுத்த வேண்டும்.
இந்தியா முதலாவது உலக T20 கிண்ண வெற்றிக்குப் பிறகு ஒரு தடவையும் அரையிறுதிக்குத் தெரிவாகவில்லை. கடந்த போட்டியில் தென்னாபிரிக்காவை வென்றும் கூட சோகத்துடன்
இந்த தொடரிலிருந்து வெளியேறியிருக்கின்றர். போட்டிகளின் போது எதிரணி வீரர்களையும்,
ரசிகர்களையும் மதிக்கத் தெரியாதவர்கள் போட்டியின் தோல்விக்கு பின் மைதானத்தின் வெளியிலிருந்து
அழுவதில் அர்த்தமில்லை.
அங்கச் சேஷ்டைகள் குறைக்கப்படல் வேண்டும். அண்மையில் ரெய்னா
கூட; ஹோலியைப் பார்த்துப் பழகி விட்டார் போலும்.
நாடு திரும்புகின்ற போது எத்தனை பேர்
செருப்படி வாங்குகிறார்களோ தெரியாது. வீரர்களை போலவே ரசிகர்களும் அளவுக்கதிகமாக உணர்ச்சி
வசப்படுதலை தவிர்த்தால் இந்தியக் கிறிக்கட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமே.
இனம், மதம், சாதி கடந்து இலங்கைக்காக
ஒன்றுபடல் வேண்டும். வென்றால் அமோகமான கொண்டாட்டங்களும் இல்லை, தோற்றால் அளவு கடந்த
அழுகையும் இல்லை. ஒழுக்கமான, கட்டுக் கோப்பான ஓவரா சீன் போடாத (சத்தியமா நான் இந்தியாவைச்
சொல்லலை) அணியின் இன்னொரு 1996ற்கான காத்திருப்பு…
இதற்கு யாருக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள், 04.10.2012 மாலை 7.00(இலங்கை நேரம்) க்கு முன்பாக..........
T/20 இல் யார் ஜெயிப்பார்கள் என்பதை முன்னமே கணிக்க முடியாது; இரண்டு over களில் எல்லாமே மாறிப்போய்விடும், யாராவது ஒருவர் one man show காட்டினாலே முழுவதும் மாறிவிடும்!! ஆனாலும் எனக்கென்னவோ அவுஸ்திரேலியாவிற்கு சந்தர்ப்பம் அதிகம் போலுள்ளது!!! காரணம் அவர்களது களத்தடுப்பு மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு + வொட்சன், ஹசி பட்டிங்!!
ReplyDeleteஇலங்கையும் மேற்கிந்தியாவும் இதுவரை இந்த தொடரில் கேதாராமாவில் ஒரு போட்டியிலும் விளையாடாதது இரண்டுக்கும் மிகப்பெரும் குறை; பாகிஸ்தானும் அவுஸ்திரேலியாவும், அனைத்து super 8 போட்டிகளையும் அங்குதான் ஆடியுள்ளது என்பதால் கள நிலவரம் அவர்களுக்கு அத்த்துப்படி!! பந்து மட்டைக்குள் சற்று மெதுவாக வருவதால் Bat பண்ணுவது சுலபமல்ல, பாகிஸ்தானில் slow போலேர்ஸ் அதிகம் இருப்பது பாகிஸ்தானுக்கு இலங்கையுடன் மிகப்பெரும் பலம்!! மேற்கிந்தியாவும் நினைக்கும் அளவுக்கு இங்கு அதிரடியாக ஆடி ஓட்டம் குவிக்க முடியாது!!
முடிவுகள் சொல்லமுடியாவிட்டாலும் நான் எதிர்பார்ப்பது 1) இலங்கை மேற்கிந்தியா Final வந்தால் இலங்கை 2) இலங்கை அவுஸ்திரேலியா Final வந்தால் 50/50 3) மேற்கிந்தியா பாகிஸ்தான் வந்தால் - பாகிஸ்தான் 4) அவுஸ்திரேலியா பாகிஸ்தான் வந்தால் 50/50:-))
விமர்சனத்தில் தற்குறிப்பேற்ற அணிகள் அளவு கடந்து விட்டன....
ReplyDeleteவேண்டுமென்றே இந்தியாவை கேவலமாகவும் இலங்கையை மிகை படுத்தியும் இருப்பது தெளிவாக தெரிகிறது,இதனை கருத்தில் கொள்வது இளம் விமர்சகருக்கு அழகு.
//வீரர்களை போலவே ரசிகர்களும் அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்படுதலை தவிர்த்தால் இந்தியக் கிறிக்கட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமே//... முற்றிலும் உண்மை.. அருமையான அலசல்..
ReplyDeleteமன்னிக்க வேண்டும் @hai friends இந்தியாவைக் கேவலப் படுத்துவது என் நோக்கம் அல்ல. நான் இந்தியா பற்றி குறிப்பிட்டது ஏதும் இதுவரை இடம்பெற வில்லை என்று நீங்கள் நிரூபிப்பீர்களானால் இது தான் எனது இறுதிப் பதிவு.
ReplyDeleteஇக்கட்டுரையில் இருக்கும் அனைத்தும் ஏற்க்கக்கூடியதாக உள்ளது :) இலங்கை வெற்றிபெற வாழ்த்துகள்...
ReplyDelete