மூன்று தசாப்தங்களாக சோபையிழந்திருந்த வட புலம் மீண்டெழுந்துவருகின்றமை கண்கூடு. அதற்கு மின்னொளியிலான இவ் உதைபந்தாட்டத் தொடர் சான்று பகர்கின்றது. ஜே.பி.எல், கே.பி.எல் இவற்றின் தொடர்ச்சியாக மிகச் சிறப்பான இவ் உதைபந்தாட்டத் தொடர் எம் மண்ணின் மைந்தர்களின் சாதிப்புக்களை புலப்படுத்துகின்றது.
யாழ் உதைபந்தாட்ட லீக்கினுடன் இணைந்து UR Friend Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் மாவட்டத்தின் முன்னணி அணிகளை இணைத்து பிரமாண்டமான போட்டிகளை நடத்தியமை உதைபந்தாட்ட ரசிகர்களிற்கு வரப்பிரசாதமே.
மாவட்டத்தில் முன்னோடியாக கூடைப்பந்தாட்டங்கள், கரப்பந்தாடங்கள், வலைப்பந்தாட்டங்களை மின்னொளியில் பார்த்த எங்களுக்கு மின்னொளியிலான உதைபந்தாட்டங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டது. அவையெல்லாவற்றையும் நீக்கி இனிய உதைபந்து விருந்து படைத்திருக்கின்ற புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகத்தினர் பாராட்டப் படத்தக்கவர்க்கள்.
கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற போட்டிகள் நேற்றுடன் 29.08.2012 நிறைவிற்கு வந்திருக்கின்றன. போட்டி ஏற்பாடுகள், பரிசளிப்பு வைபவம்,ரசிகர்களைனை ஒழுங்கு படுத்திய விதம், விருந்தினர்களின் தெரிவு பிரமாதம்.
அதனையும் தாண்டி மூன்று விதமான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சகல வீரர்களுக்கும் சந்தர்பத்தினை வழங்கியமை சிறப்பம்சம். கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 23 வயதிற்குட்பட்ட அணிகளிற்கும் போட்டிகளை ஒழுங்கு செய்தமை இளம் வீரர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையினை வளர்த்திருக்கின்றது.
அதே போல கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அணிகளிற்கான போட்டியும், மாவட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட அணிகளிற்கிடையிலான போட்டியும் ரசனைக்கு தீனி போடத்தவறவில்லை.
மாவட்டத்திலே இதுவரை வழங்கப்பட்ட வெற்றிக்கிண்ணங்களிலே மிக உயரமான 8 அடி வெற்றிக்கிண்ணம், போட்டியின் சிறந்த வீரன், விளையாட்டு உணர்வினை சரியான முறையில் வெளிப்படுத்திய வீரன் விருதுகள் சர்வதேச மட்டத்திற்கு எம்மை கொண்டு வந்திருக்கின்றது.
5,000ற்கு மேற்பட்ட ரசிகர்கள் நடு இரவிலும் போட்டிகளை ரசித்தமை வீர்ர்களின் பலமே. தவிர சர்வதேச போட்டிகளிலே விளையாடுவதைப் போன்றதாக அவர்கள் உணர்கின்றனர்.
5,000ற்கு மேற்பட்ட ரசிகர்கள் நடு இரவிலும் போட்டிகளை ரசித்தமை வீர்ர்களின் பலமே. தவிர சர்வதேச போட்டிகளிலே விளையாடுவதைப் போன்றதாக அவர்கள் உணர்கின்றனர்.
இறுதிப் போட்டியின் போது வீரர்களுக்கு மாறி மாறி காட்டப்பட்ட மஞ்சள், சிவப்பு அட்டைகள், ரசிகர்கள் விளைவித்த குழப்பங்கள், ஆயுதம் ஏந்திய ராணுவப் பிரசன்னம் போட்டியின் மகத்துவத்தினை பாழடித்திருக்கின்றமை மறுப்பதற்கில்லை. இவற்றினை தவிர்த்திருந்தால் போட்டியின் தரமே வேறு.
ரசிகர்களாயினும், வீரர்களாயினும் நடுவர்களின் முடிவினை மதிக்கத்தெரிந்தவர்களாக மாறுவதோடு விளையாட்டினை வெறியாய் நேசிப்பதையும் குறைத்தால் நாளைய உலகின் ஜாம்பவான்கள் நாங்களே...
ரசிகர்களாயினும், வீரர்களாயினும் நடுவர்களின் முடிவினை மதிக்கத்தெரிந்தவர்களாக மாறுவதோடு விளையாட்டினை வெறியாய் நேசிப்பதையும் குறைத்தால் நாளைய உலகின் ஜாம்பவான்கள் நாங்களே...
UR Friend Foundation இன் முயற்ச்சிகள் தொடர வாழ்த்துக்கள்..!
ReplyDeleteநிற்சயமாக:) வாழ்த்துக்களிற்கு நன்றிகள்....
ReplyDeleteநிற்சயமாக:) வாழ்த்துக்களிற்கு நன்றிகள்....
ReplyDelete