
ரிஷானா
கலங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். அருகில் வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது.

சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் , மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார், பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.
அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது.
காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.
- ஆதாரம்-> வினவு -
இப் பெண் யாருமல்ல ரிஷானா தான். குடும்பத்தின் சுமையை தூக்கி எண்ணற்ற கனவுகளுடன் பணிப்பெண்ணாகச் சென்றவரை உடலாகப் பார்க்க முடியவில்லையே என்று பெற்றோர் பரிதவிக்கின்றனர்.
அப்படி என்ன தவறு தான் இந்த ரிஷான செய்தார்? தவறுதலாக பாலூட்டுகையில் குழந்தை புரைக்கேறி இறந்தது தான்.
இறந்த குழந்தை இறந்தது தான் அதற்காக ஏன் இன்னும் ஒரு உயிரைப்பறித்தெடுக்க வேண்டும்? மனித நேயம் வாழ்வுரிமை என்பதற்கு அப்பாற்பட்டதே "ஷரியா" சட்டம் என்பதை மனம் என்னவோ ஊகிக்கின்றது.
என்ன தான் இருந்தாலும் அப் பெண்ணின் மரணத்திற்கு எம்முடைய ஆட்சியாளர்களும் காரணம் தான். அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு ஆக்கபூர்வமாக எந்த முயற்சிகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. கண்துடைப்பிற்காக போவதும் வருவதுமான பயணங்கள் இருந்தது.
என்ன தான் இருந்தாலும் அழ்ந்த அனுதாபங்கள்,
ஷிராணி பண்டாரநாயக்கா

சட்டவாக்கத்தை நோக்கி எவருமே கேள்வியெழுப்ப முடியாது என்ற நிலை மாறி ஆட்சியாளர்களுக்கு ஸ்துதி பாடும் நிலையை நீதித்துறை மீது வலிந்து திணிக்கும் ஒரு செயற்பாடாகவே பிரதம நீதியரசர் மீதான இந்தப் பதவி விலக்கல்.
இதன் பின்னணியைப் பார்க்கையில் திவி-நெகும வில் சில பிரேரணைகளை மாற்றியதும், சிலவற்றை பகிரங்க விவாதத்திற்கு விட்டு வாக்களிப்புக்கு விட வேண்டும் எனவும் கட்டளையிட்டமையே.
இதை விட வேறேதும் பிரதம நீதியரசர் செய்யவில்லையே. பலவந்தமாக வெளியேற்பட்டதாக அவர் இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு பாரிய பிரச்சனையாகவே தெரிகின்றது.

அத்தோடு அவர் ஒரு இரும்புப் பெண்ணாகவே இன்னமும் தெரிகின்றார். எதற்கும் வளைந்து கொடுக்காத அவரின் துணிச்சல் பெண்ணுலகத்திற்கு பெரும் எடுத்துக்காட்டு.
ஆட்சியாளர்களை எதிர்த்தால் இதுவே முடிவு என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. என்ன தான் இருந்தாலும் ஷிராணி பண்டாரநாயக்க இன்னும் மக்கள் மனங்களில் பிரதம நீதியரசரே.

விஸ்வரூபம்.

50 வருட சினிமா உலகில் கமலது பலத்தை தெரிந்துகொள்வதற்கு சிலர் சந்தர்ப்பங்களை வகுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்.
விஸ்வரூபம் பார்ப்பதற்கு இந்தியாவிற்கோ, இல்லாவிட்டால் மலேஷியாவுக்கோ போய்த்தான் பார்க்கவேண்டும் என்றளவில் இலங்கையில் செங்(?)கோலாட்சி நடக்கின்றது. நல்ல வேளை ரஹ்மான் இசையமைக்கவில்லை, இல்லாவிட்டால் அவரும் சட்னியாகியிருப்பார். விஸ்வரூபம் படத்தின் கதை தொடர்பாக நண்பன் ஒருவர் பகிர்ந்த விடயம்.
இவன் தீயென்று தெரிகின்றதா?

சில பல விடயங்களை கேட்க விரும்புகின்றேன்.
நண்பன் ஒருவர் பகிர்ந்த விடயம்,
முஸ்லிம்களின் அமைப்பிலே திரைப்படங்களைப் பார்க்கக்கூடாது என்பதே. நீங்கள் பின்பு எதற்கு உங்கள் மதத்திற்கு எதிராக இருக்கின்றீர்கள்.
தவிர குளியாப்பிட்டிய நகரில் அஸ்வெத்தும விஹாரைக்கு அருலிருந்து வெதஹாமுதுருவோ என்பரின் கீழ் இயங்கும் ஹெலசிஹல ஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று குளியாப்பிட்டி நகருக்கு முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படக் கூடிய பதாதைகளை ஏந்தியவாறு குளியாப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு அருகில் சென்று அல்லாஹ் என்ற அரபு பதாதை சூட்டப்பட்ட கொடும்பாவி ஒன்றை எரித்தனர். இவர்கள் ஏந்தி வந்த பதாதைகளில் முஸ்லிம்களை மிகவும் நோவிக்கும் வகையில் பன்றி ஒன்றின் உருவத்தின் மேல் அரபில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு நீங்களும் , உங்கள் அமைச்சர்களுமாகச் சேர்ந்து என்ன செய்தீர்கள்?
ரிஷானாவுக்காக என்ன செய்தீர்கள்?
அனுராதபுரத்தில் தர்க்கா தகர்க்கப்படும் போது என்ன செய்தீர்கள்?
உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். இரட்டைவேடம் போடுவதை மாற்றி பாருங்கள். வித்தியாசங்களை உணர்வீர்கள்.
மஹேல.
கனவானாக விடைபெற்றிருக்கின்றார்.
முரளி, சங்காவைப் போல மனங்கவர்ந்த ஒரு வீரன். அணித்தலைவராக அவுஸ்ரேலியாவில் தொடரை சமப்படுத்தியிருக்கின்றார். நான்காவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்ரேலியா சார்பில் 13 பேர் (2நடுவர்கள்) விளையாடியிருக்காவிடின் தொடரை வென்று சாதித்துக்கொடுத்த பெருமையும் அவருக்கே.
வாழ்த்துக்கள் மஹேல.

ரிஷானா குறித்த பகுதியில் வினவு எழுதியதே 90 வீதம் இருக்கிறது. அதை குறிப்பிடாமல் இருப்பது வளருகின்ற உங்களுக்கு நல்லதல்ல. முதலில் அதைக் குறிப்பிட்டு விடுங்கள்.
ReplyDelete“ஷிரா“ சட்டமல்ல. அது “ஷரியா“
நிரம்பிய பொறுப்புணர்வு வேண்டும். சில விடயங்களை கையாளும் போது.
This comment has been removed by the author.
ReplyDeleteபல பதிவுகளிலும், கருத்துபகிர்வுகளிலும் படித்தவற்றினை மசாலா தொகுப்பாக கொடுத்திருக்கின்றீர்கள்..
ReplyDeleteபொறுப்பு வாய்ந்த விடயங்களை பற்றி பேசும் போது உங்கள் சுயத்தை அடுத்தவர்களிடம் இருந்து கடன்வாங்குவது எந்தளவுக்கு நல்லது என்று சிந்தியுங்கள் சகோதரா..!
நானும் நேற்று இரவு உங்கள் முகநுால் பதிவை பார்த்துவிட்டு ஆவலுடன் இப்பதிவை படிக்கவந்தவன்தான்.. அதனால்தான் ஏமாற்றம்
இவற்றை எல்லாம் எழுதி இருக்கிறீர்கள் அதுக்கு முதலில் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஷரியா சட்டம் முதலில் சவுதியில் பின்பற்ற படுகின்றதா ?என்பதை ஆராய்ந்து பார்த்து தானா ??? றிஷானா பற்றி எழுதினீர்கள்.ஷரியா சட்டம் சவுதியில் பின்பற்றப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன்.அதாவது அந்த நாடு செல்வந்தர்க்கு ஒரு நீதியும் ஏழைக்கு ஒரு நீதியும் என்ற ரீதியில் இருக்கிறது.
அடுத்து ஷிராணி இவர் ஒன்றும் சிறந்த நீதிபதி அல்ல.என்பது பலருக்கும் தெரியும்.ஆருயிர் தோழி மகிந்த அவர்களின்.இருந்தும் ஏன் இவர்களுக்கிடையில் முறுகல் வந்தது என்பதை தேடி பாருங்கள்.
இதில் நீங்கள் ஒன்ற கேட்க விளையலாம்.அப்போ எதற்காக ஷிரானிக்கு ஆதரவாக அனைவரும் நின்றனர் என்று.அதற்கான பதில் நீதித்துறையில் அரசியல் தலையீடு வேண்டாம் என்பதே ஆகும்.நீதித்துறையில் அரசியல் இருந்தால் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பது சட்டத்துறையினரின் கருத்து.உண்மையும் கூட.அடுத்து தனக்கு சார்வாக பல சந்தர்ப்பங்களில் செயற்ப்பட்ட ஷிரானிக்கும் மகிந்தவுக்கும் என்ன முறுகல் வந்தது என்பதை பார்த்து விட்டு மிகுதியை கேளுங்கள் விளக்கம் தாரேன்.