Friday, October 19, 2012

இல்லைஇல்லை சொல்ல ஒருகணம் போதும் ,இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்???


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்தாலும் மீண்டுமொரு முறை ரசிக்கும் வாய்ப்பு அண்மையிலே கிடைத்தது. இத்திரைப்படத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,அஜித் ஐஸ்வர்யா ராஜ் தபு அப்பாஸ்  போன்ற பலர் தங்களைத் தத்ரூபமாக நிரூபித்திருக்கின்றனர்.பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன்  படத்தை சட்டப் படியாக இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படம் தழுவல் நாவலான SENCE & SENSIFILITY  இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது பின்னாலான தேடல் தந்த முடிவு.
                                 
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கி அனுப்பப்படும் பாலா (மம்முட்டி) அங்கு நடக்கும் போரில் ஊனப்படுத்தப்படுகின்றார். பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காக போர் செய்தவர்களை(பாலா உட்பட்ட அனைவரையும்)  முற்றிலும் மறந்து விட்டது என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்
                
பின்னர் மீனாட்சியைக் விரும்புகின்றார் ஆனால் செயற்கைக் கால்கள் பொருத்திய பாலாவை மீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாட்சியோ சிறீகாந்தைத் (அப்பாஸ்) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் (அஜித்) சௌம்யாவிற்கும் (தபு) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.
               
ராஜிவ் மேனனின் இயக்கம் தனி; தயாரிப்பிலே கலைப்புலி எஸ்.தாணு ஏ.எம்.ரத்னம் தங்களை மீண்ணும் உச்சத்திலே நிறுத்தியிருக்கின்றனர். ரஹ்மான் இசை சொல்லவே தேவையில்லை.
பாடல்கள் நெஞ்சத்தை வருடுகின்றன. பழசு பழசு என்று தூக்கி எறிவதை விட்டு அதனுள் இருக்கும் பொக்கிஷங்களை காணத் தயாராவோம்…

Saturday, October 6, 2012

டீலா, நோ டீலா? T-20 உலககிண்ணம்-2012.


எதிர்பார்ப்புக்கள், ஆரவாரங்கள், கருத்துக் கணிப்புகள்,ஊகங்கள் இவை அனைத்தையும் தாண்டி உலகக்கிண்ண T-20 போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. போட்டித்தொடர் ஆரம்பமானதற்கு முன்னதே எதிர்பார்க்கப் பட்ட இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிகளில் மோதவுள்ளன.
இன்னும் 20 வருடங்களுக்கு இலங்கையில் எந்த வித உலகக்கிண்ணப் போட்டிகளும் இல்லை என்பதால் ரசிகர்கள் போட்டிகளைப் பார்க்க முந்தியடிக்கின்றனர். இலங்கை அணி இறுதிப் போட்டிக்கும் வந்திருப்பதால் அவர்களுக்கு மிகப் பலமான ரசிகர்களின் ஆதரவு காத்திருக்கின்றது. சொந்த மைதானம் என்பதாலே சாதிக்கும் வாய்ப்பு இலங்கைக்கு அதிகம்.
முதலாவது அரையிறுதியில் இலங்கை ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறியமையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.வழமையாக அடித்தாடுகின்ற டில்ஷான் 43 பந்துகளில் 35 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். ஒரு T-20 போட்டியின் போது எதிர்கொண்ட பந்துகளை விட ஓட்டங்களை குறைவாகப் பெற்றால் என்ன நிலை என்பது அனைவரும் அறியாததில்லை.
                          
 மிகப் பெரும் பொறுப்பு டில்ஷானிடம் காத்திருக்கின்றது இறுதிப் போட்டியில். ஆனால் அன்றைய அரையிறுதியில் முக்கியமான தருணங்களில் 10பத்திற்கும் மேற்பட்ட ஒற்றை ஓட்டங்களை கட்டுப்படுத்தியதோடு, அசத்தலான களத்தடுப்பையும் மேற்கொண்டார்.

மஹேல, இலங்கைக்கு கிடைத்திருக்கின்ற மிகப் பெரும் துடுப்பாட்ட தூண், அணித் தலைவராக குழப்பமில்லாது மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியிலும் சாதித்துக் காட்டியிருக்கின்றார். துடுப்பாட்டம்+ அணித்தெரிவு(ஹேரத்தின் வருகை) + ஒவ்வொரு ஓவர்களிற்கும் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தியமை கிண்ணம் வெல்லும் நம்பிக்கையினை அதிகப் படுத்தியிருக்கின்றது.
சங்கா, துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பெரிதாக சாதிக்கா விட்டாலும் விக்கட்காப்பிலே தனிக்காட்டு ராஜாவே.பாக்கிஸ்தானுடன் பெறப்பட்ட ஸ்டம்ப் மூலமான விக்கட்கள் வெற்றியின் அடித்தளம்.
                                  
மலிங்க, என்னவோ எதோ என்று முக்கியமான நேரங்களில் பிடியை தவறவிட்டு விட்டு பாக்கிஸ்தான் துடுப்பாட வீரர்களோடு பந்தாலே பேசியிருக்கின்றார். வாழ்த்துக்கள்,

திசார பெரேரா இறுதி ஓவர்களில் அடித்த பலமான அடிகளும், மத்யூஸ்+ஹேரத்தின் பந்து வீச்சுப் பெறுதிகளுமே இலங்கையின் வெற்றியின் பின்னால். குலசேகர+மலிங்க கூட சிக்கனமான பந்துவீச்சுப் பெறுதிகளை பதிந்திருந்தனர்.
மிகப் பெரிய பாக்கிஸ்தான் துடுப்பாட்ட படைக்கு மிகச் சிறந்த அச்சுறுத்தலை வழங்கி போட்டியை இலங்கை பக்கம் பறித்தெடுத்த பெருமை பந்துவீச்சாளர்களுக்கும்,ஒட்டு மொத்த இலங்கை அணியினரிற்குமே.
                                 
இதுவரை பெரிதாக எதிர்ப்புக்கள் எவற்றையும் சந்திக்காது மேலேறி வந்த இலங்கை அணி அரையிறுதியில் மிகப் பெரும் சவாலை எதிர் கொண்டு வெற்றியீட்டியிருக்கின்றனர்.
பல இந்திய ரசிகர்களுக்கும் + இலங்கை எதிர்பாளர்களுக்கும் வயிற்றிலே புளியைக் கரைத்த விடயம் வெறும் 139 ஓட்டங்களை மட்டுமே ஒரு T-20 போட்டிகளில் பலமான துடுப்பாட்ட வரிசை கொண்ட அணிக்கெதிராகப் பெற்று அவ் ஓட்ட எண்ணிக்கையினை கொண்டு போட்டிகளில் வெற்றியீட்டுவதுமே. என்ன தான் இருந்தாலும் அணி ஒற்றுமை, அடக்கமான தன்மை என்பவற்றிற்கு ஒரு சல்யூட்.

                            
பந்துவீச்சுத் துறையில் ஆதிக்கம் செலுத்திய பாக்கிஸ்தான் அணியினுடைய துடுப்பாட வீரர்கள் போராடத் தவறியமையே இறுதிப் போட்டிக்கு அவர்கள் வரமுடியாமல் போனதற்கு காரணம். பூம் பூம் அப்ரிடி ஏனைய அணிகளை கிலி கொள்ள வைத்து அதிரடிகள் காட்டிய காலம் மலையேறி விட்டது.உமர்குல் தன் அதிரடிகளை காட்ட சந்தர்பமேதும் வரவேயில்லை.
               
இரண்டாவது அரையிறுதியில் கெய்ல்&பொலார்ட் அடித்த அடிகள் அவுஸ்ரேலியாவின் மரண அடிகளே. கங்காருக்களின் காலம் கடந்து போயே விட்டது. 14 ஆறுகள், 13 நான்குகள் முடியாதப்பா. எல்லாவற்றையும் விட டொஹேர்ட்டியின் இறுதி ஓவரில் பொலார்ட் அடித்த தொடர்ச்சியான இமாலய ஆறுகள் கங்காருகளின் கிறிக்கட் வாழ்வின் பெரும் அடிகள். வட்ஷன், வார்ணர், ஹசி துடுப்பாடத்தில் ஏமாற்றியமை அவுஸ்ரேலியாவின் இறுதிப் போட்டிக் கனவை இழக்கச் செய்திருக்கின்றது.
                            
என்ன தான் இருந்தாலும் இதுவரை T-20 உலக கிண்ணத்தை ஒருமுறையேனும் வெல்லாத இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக் களத்தில். சொந்த மைதானம், ரசிகர்களின் ஆதரவு, போர்மில் இருக்கும் துடுப்பாட வரிசை, பந்து வீச்சாளர்களின் தொடர்ச்சியான அசத்தல் என்பன இலங்கை அணிப்பக்கம் சாதகமானவை.

கெய்ல் என்னும் தனி மனிதனோடு பொலார்ட் இணைந்திருப்பது மேற்கிந்தியாவின் பக்கம் போட்டியை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தவிர அணித்தலைவர் டரன்சமி வீழ்ந்துகிடந்த வேஸ்ட் இண்டியா (WASTE+INDIA)வை என்னவாக ஆக்கப்போகின்றார் என்பதற்கு காத்திருக்கலாம்.

முன்னதாக சுப்பர்-8 ஆட்டமொன்றில் இலங்கை அணியினரால் மேற்கிந்தியா வாரப் பட்டிருக்கின்றது. மேற்கிந்தியர்கள் பழிக்கு பழி தீர்ப்பார்களா?, இல்லை இலங்கையின் வெற்றிப் பயணம் தொடருமா? பல்லேகல அடிகள் கொழும்பிலும் தொடருமா?
                           
கெய்ல்ஸின் நடனம், அதிரடிகள், மலிங்கவின் மாயாஜாலங்கள், பலமான அணித்தலைவர்களிற்கிடையான மோதல், டில்ஷானா இல்லை கெய்ல்ஸா என்கின்ற ஆதங்கங்களுக்கும் பதில் கிடைக்கும்வரை….
                 
          

Thursday, October 4, 2012

யாரு, யாரு யாரூ? T-20 உலகக்கிண்ணம்.


சூடு சுவாரஸ்யங்களுக்கு முற்றும் குறைவில்லாது நடக்கும் என எதிர்பார்க்கப் பட்ட T-20 கிறிக்கட் தொடர் இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கின்றது. எதிர்பார்க்கப் பட்ட வீரர்கள், அணிகள் பெரும்பாலாக சாதித்திருந்தாலும் ஒருசில சறுக்கல்கள் இல்லாமலும் இல்லை.
அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி மட்டுமே இன்னும் எஞ்சி இருப்பதால் அவை பற்றிய அலசல் போதுமானது. எதிர்பார்த்த படியே இலங்கை, மேற்கிந்தியா மேலெழுந்து வந்துள்ளது. அடுத்தபடியாக பாக்கிஸ்தான், அவுஸ்ரேலியா கூட தத்தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை, தென்னாபிரிக்காவுடன் பெற்ற தோல்வியைத் தவிர இத் தொடரில் வேறொரு அணியிடமும் போட்டியை இழக்கவில்லை. டில்ஷான், ஜெயவர்தன, சங்கக்கார தங்கள் நிலைகளை உணர்ந்து ஆடுகின்றனர். தவிர மத்தியூஸ், திரிமன்னே, திசர பெரேரா துடுப்பாடத்தில் தங்களையும் ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பந்துவீச்சுத் துறை மெண்டிஸ்+மலிங்கவின் கைகளில். எனினும் இவ் இரண்டு பேரை மட்டும் நம்பி களமிறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை கடந்த போட்டிகள் பார்த்தவர்களிற்கு புரிந்திருக்கும்.
               
தொடர்ச்சியாக பல இறுதிப் போட்டிகளிற்கு இலங்கை வந்திருந்தாலும் கிண்ணங்களை கைப்பற்றாமலே செல்வது ரசிகர்களை பொறுத்தவரை ஆதங்கமானதே. அந்தக் குறையையும் 1996 ற்குப்பின் எந்த உலக கிண்ணத்தையும் வெல்லாத குறையையும் இலங்கை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதல் தடவையாக  ஒரு உலக T20 கிண்ணத் தொடரை நடத்தும் அணி அரை இறுதிக்குத் தெரிவாகி இருக்கிறது. இது கூட சொந்தமண்ணில் விளையாடும் இலங்கைக்கு சாதகங்களைத் தரக்கூடும்.
           
பாகிஸ்தான் தனது தொடர்ச்சியான நான்காவது உலக T20 கிண்ண அரையிறுதிக்குத் தெரிவாகியிருக்கின்றது. துடுப்பாட வரிசை, பந்துவீச்சு, அசத்தலான களத்தடுப்பு அவர்களை மேலே கொண்டுவந்திருக்கின்றது. சஜீட்அஜ்மல் தொடர்ந்தும் அணிக்கு கைகொடுத்து வருகின்றார். மொஹமட் ஹாஃபீஸ் கூட சொல்லும் படியாக செயற்படுகின்றார். எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய பெரும் புயல் அப்ரிடி அவர்களின் பலம். இன்னொரு 2009 நோக்கி அவர்கள் பயணிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஒட்டுமொத்த அணியின் ஒற்றுமை அவர்களுக்கு மேலும் வெற்றிகளை பெற்றுத் தராலம்.
                                  
மேற்கிந்தியா,உண்மையிலே அனைவராலும் எதிர்பார்கப்பட்டதைப் போன்று செய்தும் காட்டியிருக்கின்றனர். கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் இணைந்து அடிக்கும் அடிகள் எதிரணிகளை ஆட்டம் காண வைக்கின்றன. கெய்லின் நடனம் கூட அனைவரையும் அசத்துகின்றது. ஒட்டு மொத்த அணியும் கிண்ணத்திற்காகவும், சாதிக்க வேண்டும் என்னும் வெறியோடும் விளையாடுவது புலப்படுகின்றது. டரன் சமி கூட அணியை கட்டுக்கோப்பாக வெற்றிக் கிண்ணம் நோக்கி அழைத்துச் செல்கின்றார். என்ன தான் நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
             
அவுஸ்ரேலியா,ஒருகாலத்தின் கிறிக்கட்டின் ஜாம்பவான்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள். இடைவெளிகள், சிரேஷ்ட வீரர்களின் ஓய்வால் ஸ்திரமாக தொடரமுடியாது தட்டுத்தடுமாறி நிமிர்ந்திருக்கின்றனர். வட்ஷன், ஹசி, மிச்சல் ஸ்ராக் அபாரமாக செயற்படுகின்றனர். மீண்டும் ஏனைய அணிகளை அச்சுறுத்தும் அணியாக தங்களை பலப்படுத்த வேண்டும்.
              
 இந்தியா முதலாவது உலக T20 கிண்ண வெற்றிக்குப் பிறகு ஒரு தடவையும் அரையிறுதிக்குத் தெரிவாகவில்லை. கடந்த போட்டியில் தென்னாபிரிக்காவை வென்றும் கூட சோகத்துடன் இந்த தொடரிலிருந்து வெளியேறியிருக்கின்றர். போட்டிகளின் போது எதிரணி வீரர்களையும், ரசிகர்களையும் மதிக்கத் தெரியாதவர்கள் போட்டியின் தோல்விக்கு பின் மைதானத்தின் வெளியிலிருந்து அழுவதில் அர்த்தமில்லை. 
                
அங்கச் சேஷ்டைகள் குறைக்கப்படல் வேண்டும். அண்மையில் ரெய்னா கூட; ஹோலியைப் பார்த்துப் பழகி விட்டார் போலும்.

                                           
நாடு திரும்புகின்ற போது எத்தனை பேர் செருப்படி வாங்குகிறார்களோ தெரியாது. வீரர்களை போலவே ரசிகர்களும் அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்படுதலை தவிர்த்தால் இந்தியக் கிறிக்கட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமே.
இனம், மதம், சாதி கடந்து இலங்கைக்காக ஒன்றுபடல் வேண்டும். வென்றால் அமோகமான கொண்டாட்டங்களும் இல்லை, தோற்றால் அளவு கடந்த அழுகையும் இல்லை. ஒழுக்கமான, கட்டுக் கோப்பான ஓவரா சீன் போடாத (சத்தியமா நான் இந்தியாவைச் சொல்லலை) அணியின் இன்னொரு 1996ற்கான காத்திருப்பு… 

                 


இதற்கு யாருக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள், 04.10.2012 மாலை 7.00(இலங்கை நேரம்) க்கு முன்பாக..........
                 

பிரபல்யமான பதிவுகள்